CHARUKESI MOVIE REVIEW

'சாருகேசி'  திரைவிமர்சனம் 



அருண் விஷவல்ஸ்,மெட்ராஸ் சினி புரொடக்ஷன் மற்றும் ஸ்ரீஅக்ரஹாரம் ராஜலட்சுமி புரொடக்‌ஷன் தயாரித்திருக்கும் சாருகேசி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. இதில் ஒய் ஜி மகேந்திரன், சுஹாசினி மணிரத்னம், ராஜ் ஐயப்பா, ரம்யா பாண்டியன், சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், மதுவந்தி, தீனா ரித்விக், பிரித்திகா ஆகியோர் நடித்துள்ளனர்.

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

கதையின் நாயகனான ஓய் ஜி மகேந்திரா ஒரு பெரும் இசைப்பாடகர். அவருக்கு திடீரென அல்சைமர் எனும் மறதிநோய் ஏற்படுகிறது. அவரது மகனுக்கு ஓய் ஜி மகேந்திரா மீது பெரிய மரியாதை ஏதுமில்லை. ரம்யா பாண்டியனை காதலிக்கும் அவருக்கு கதையில் ஒரு இருக்கிறது. மேலும் அவருக்கும் ஓய் ஜி மகேந்திராவிற்கும் உள்ள பந்தத்தில் ஒரு ட்விஸ்டும் உண்டு. இச்சூழலில் அல்சைமர் நோயிலிருக்கும் ஓய் ஜி மகேந்திரா வாழ்வை பிறர் வாயிலாக நாம் அறிய முடிகிறது. முடிவில் நோய்மையிலிருந்து ஓய் ஜி மகேந்திரா மீண்டாரா? இல்லையா? என்பதே கதை..

ஓய் ஜி மகேந்திரா தனது தேர்ந்த அனுபவத்தை நடிப்பில் வார்த்துள்ளார். “வந்து போவதே நம் வேலை..வழி நடத்துவது அவன் லீலை” என்ற வரிகளை அவர் பாடுகையில் நமது ஜீவன் உருகிப்போய்விடுகிறது. சத்யராஜ் தனது அனுபவமிக்க நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். சுஹாசினி, தலைவாசல் விஜய், ராஜ் ஐயப்பன், ரம்யா பாண்டியன் ஆகியோர் தங்களது பாத்திரங்களை நேர்த்தியாக கையாள்ந்துள்ளனர்.

சிறப்பு தோற்றங்களில் வரும் சமுத்திரக்கனி, மதுவந்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் பங்களிப்பும் கதைக்கு வலுசேர்க்கிறது. தேவா நிச்சயமாக இப்படத்தில் தேனிசையை தந்துள்ளார். பா.விஜய் பாடல், வசனம் ரசிக்க வைக்கிறது. சுஹாசினி மணிரத்னம் தன் கணவனின் இசைச் சாம்ராஜ்யம் சரிவதையும், பிள்ளையின் அவமதிப்பையும் ஒருசேரத் தாங்கும் பாக்கியம் கதாபாத்திரத்தில் அசாத்தியமான முதிர்ச்சியைக் காட்டியுள்ளார். 

தன்னுடைய கடந்த கால வலிகளை மறந்து கணவனுக்கு அணுசரனையாக அவரின் ஏற்ற தாழ்வுகளில் உடனிருந்து கண்ணும் கருத்துமாக கவனித்து கொள்ளும் அக்மார்க் ஆச்சாரமிக்க குடும்ப தலைவியாக வாழ்ந்துள்ளார். கணவன் படுக்கையில் கிடந்து புதிய ராகங்களைப் பாடி, தன் மடியிலேயே உயிர் துறக்கும் அந்த இறுதி நிமிடங்களில், அவர் காட்டும் அந்த அமைதியான, ஆழமான சோகத்துடன் கதறும் காட்சிகளில் பார்ப்பவர்களின் இதயத்தைக் கனக்கச் செய்கிறது.

சத்யராஜ் வழிகாட்டியாக நண்பனாக எங்கிருந்தோ புயல் போல வந்து, அறிவுரை கூறிவிட்டுச் செல்லும் அந்த சில காட்சியில் சத்யராஜ் தியேட்டரையே அதிர வைக்கிறார். அவரது கம்பீரமான குரலும், ‘பிரேடேட்டர்” போன்ற அவரது அழுத்தமான உடல்மொழியும் தான் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஆகச்சிறந்த காட்சிகளாக இருக்கிறது.

ஈகோ மற்றும் நோயால் சாருகேசியின் குடும்பம் தத்தளிக்கும் போது, ஒரு தூணாக நின்று நட்பின் இலக்கணத்தையும், பாசத்தின் தேவையையும் தன் முதிர்ந்த நடிப்பால் உணர்த்தியுள்ளார் தலைவாசல் விஜய்.

மொத்தத்தில் இந்த 'சாருகேசி' இசையின் வலி உணர்வு! 

RATING: 3.8/5

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.