ANANTHAN KAADU MOVIE REVIEW

அனந்தன் காடு விமர்சனம் 



யக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், முரளி கிருஷ்ணா திரைக்கதையில் ஆர்யா, இந்திரன்ஸ், சுனில் மற்றும் பலர் வெளியாகியுள்ள படம் தான் 'அனந்தன் காடு'

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

90களில் தமிழீழப் போராளி ஆர்யா, இலங்கை ராணுவத்துடனான மோதலுக்குப் பிறகு கேரளாவில் தஞ்சம் புகுகிறார். அங்குள்ள குற்றப் பின்னணி கொண்ட சிலரின் அடைக்கலத்தில் அவர் இருக்கும்போது, கேரள முதல்வர் தனது அரசியல் எதிரிகளை ஒழிக்க காவல்துறை உயர் அதிகாரி மூலம் குற்றவாளிக் கும்பலைப் பயன்படுத்த திட்டமிடுகிறார். 

ஆனால் அந்தத் திட்டம் நிறைவேறும் முன், ஆர்யா ஒரு முக்கிய நபரை கொடூரமாகக் கொலை செய்கிறார். இதற்கான காரணம் என்ன? அதன் பின்னர் அவரது வாழ்க்கையும், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது? என்பதை ஆக்ஷன் தொனியில் சொல்கிறது படம்.

1990களின் கொந்தளிப்பான காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு, தமிழீழப் போராட்டத்தின் நிழல்கள், கேரளாவின் நிழல் உலகம், அரசியல் சதிகள் எனப் பல அடுக்குகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது ‘அனந்தன் காடு’. இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இந்த ஆக்ஷன் திரில்லரை விறுவிறுப்பான வேகத்தில் கொண்டு சென்றிருக்கிறார். நடிகர் ஆர்யா தலைமைப் பாத்திரத்தில் இறங்கி, தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகனாக ஆர்யா தனது பாத்திரத்திற்கு முழு நீதி சேர்த்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவர் தனது உடல் மொழியாலும், தீவிரத்தாலும் கதாபாத்திரத்தை உயிர்ப்பித்துள்ளார்.  ஆந்திராவைச் சேர்ந்த கேரள காவல்துறை உயர் அதிகாரியாக சுனில், கேரள முதல்வராக விஜயராகவன், மற்றும் சாந்தி பாலச்சந்திரன், ரெஜினா கசாண்டரா, ஜெயின் பவுல், நிகிலா விமல், அச்யூத் குமார் உள்ளிட்டோர் தங்கள் பங்கைச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர். 

இயக்கத்தில் ஜியென் கிருஷ்ணகுமார் படத்தை வேகமாகவும், இறுக்கமாகவும் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் தேவையற்ற சில காட்சிகள் திணிக்கப்பட்டதாக உணரப்படுகிறது. கதையின் இறுதி ராஜஸ்தானில் நடப்பது போன்று, பல்வேறு இடங்களுக்கு சுற்றி வரும் விதம் சற்று அதிகமாகத் தெரிகிறது. திரைக்கதை, வசனம் எழுதிய முரளி கோபி உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அதை கமர்ஷியல் ஆக்ஷன் பாணியில் கொண்டு வந்திருக்கிறார். 

கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், சில கதாபாத்திர சித்தரிப்புகளும் சம்பவங்களும் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடியவையாக அமைந்துள்ளன.

மொத்தத்தில் இந்த 'அனந்தன் காடு' அடிதடி நிறைந்த காடு...

RATING 3.9/5


This is the most recent post.
பழைய இடுகைகள்

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.