லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு: முழு விபரம்!
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 6,988 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக 6 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 89 பேர் உயிரிழந்துள்ளனர். 56வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 3,409ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த மேலும் 7,758 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,58,813 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 52,273 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மேலும் 1,329 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 22வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 1989 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
அரியலூர் 4
செங்கல்பட்டு 449
சென்னை 1329
கோயம்புத்தூர் 270
கடலூர் 89
தருமபுரி 30
திண்டுக்கல் 100
ஈரோடு 22
கள்ளக்குறிச்சி 104
காஞ்சிபுரம் 442
கன்னியாகுமரி 269
கரூர் 27
கிருஷ்ணகிரி 31
மதுரை 301
நாகப்பட்டினம் 10
நாமக்கல் 51
நீலகிரி 40
பெரம்பலூர் 25
புதுக்கோட்டை 110
ராமநாதபுரம் 86
ராணிப்பேட்டை 244
சேலம் 112
சிவகங்கை 84
தென்காசி 99
தஞ்சாவூர் 162
தேனி 235
திருப்பத்தூர் 86
திருவள்ளூர் 385
திருவண்ணாமலை 152
திருவாரூர் 100
தூத்துக்குடி 317
திருநெல்வேலி 212
திருப்பூர் 51
திருச்சி 199
வேலூர் 212
விழுப்புரம் 157
விருதுநகர் 376
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 11
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 5
ரெயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
மொத்தம் 6,988
கருத்துரையிடுக