சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை அடையாறு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய சிகிச்சைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் உதவியுள்ளார். தினமும் பொன்னம்பலத்தின் உடல்நிலை குறித்து தொலைபேசியின் மூலம் விசாரித்தும் வருவதாக செய்திகள் வெளியாகின.
மேலும் இந்த சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினையும் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனிடையே வீட்டிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் பொன்னம்பலம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உதவிய நடிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதில், “எனக்கு 52 வயதாகிறது, வீட்டிலிருக்கும்போது திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதை அறிந்த சரத்குமார் சார் உடனடியாக என்னை மருத்துவமனையில் சேர்க்க பண உதவி செய்தார். பின்பு அங்கு முழுமையாக பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரக செயலிழப்பை உறுதி செய்தனர்.
மேலும், நுரையீரலில் நீர் சேர்ந்திருப்பதற்கு சிகிச்சை அளித்தனர். இதனை அறிந்த விஷால் - கார்த்தி இருவரும் அடையாற்றில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் போதுதான் கமல் சார் பேசினார்.
"இப்போதைய காலகட்டத்தில் இதெல்லாம் சரி செய்துவிடலாம். எதற்கும் கவலைப்பட வேண்டாம். உனது குழந்தைகளின் கல்விச் செலவை நான் பார்த்து கொள்கிறேன். வேறு என்ன உதவி வேண்டுமானாலும் அழைக்கவும்" என்று நம்பிக்கையூட்டினார்.
பின்பு எனது நிலையை அறிந்து ரஜினி சார் பேசினார். "எதற்கும் கவலைப்பட வேண்டாம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பேசுகிறேன். நான் பார்த்து கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
அடுத்த நாள் ரஜினி சாருடைய மனைவி பேசி, "கவலை வேண்டாம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பேசியிருக்கிறோம். ரஜினி சார் சொல்லச் சொன்னார்" என்று தெரிவித்தார். மேலும், வீட்டுச் செலவுக்கும் பண உதவி செய்தார்.
விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து, குணமாகி படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். எனக்கு உதவிய, நம்பிக்கையூட்டும் விதமாக பேசிய அனைத்து நடிகர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.
கருத்துரையிடுக