தமிழகத்தின் கொரோனா விபரம்!
தமிழகத்தில் இன்று மேலும் 4,244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,210, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 34 பேர் உட்பட 4,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
41,325 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 4,244 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 3,617 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 85,915ல் இருந்து 89,532 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக மேலும் 68 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
tamillive.news
கருத்துரையிடுக