தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா!தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,42,798-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 23,174 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,78,254 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து 553,471 பேர் குணமடைந்தனர். ஒரே நாளில் கொரோனாவுக்கு 500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,701 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்...

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 92,567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 3,035 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 2,032- ஆக உயர்ந்துள்ளது.

*  தமிழகத்தில் இன்று 66 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் எந்த ஒரு நோய் அறிகுறியின்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,140 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 78,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 105 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 15,85,782 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 56.93% ஆக உள்ளது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 44,560 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 4,328 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 87,111 ஆண்கள், 55,664 பெண்கள், 23 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

     ^ மகாராஷ்டிரா -  03

     ^ கேரளா - 06

     ^ கர்நாடகா - 11

     ^ தெலுங்கானா - 03

     ^ ஆந்திரப்பிரதேசம் - 02

     ^ பீகார் - 01

     ^ பஞ்சாப் - 01

     ^ புதுச்சேரி - 07

     ^ சத்தீஸ்கர் - 01

     ^ குஜராத் - 01

     ^ ஒடிசா - 04

     ^ மேற்குவங்கம் - 01

* வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

     ^ குவைத் - 05

     ^ ஓமான் - 02

     ^ சவூதி அரேபியா - 06

     ^ ஐக்கிய அரபு நாடுகள் - 03

     ^ கெய்கிஸ்டான் - 01
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.