கொரோனா தொற்று 3 லட்சத்தை தாண்டியது!

 கொரோனா தொற்று 3 லட்சத்தை தாண்டியது! 

தமிழகத்தில் இன்று 5,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 3,02,815ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,44,675 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 6,037 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 53,099 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 114 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 5,041 ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 976 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,10,121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 96,466 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11,328 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 25 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,327 ஆக உள்ளது.

* தமிழகத்தில் மொத்தம் 130 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 61 அரசு மருத்துவமனைகளிலும், 69 தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

* தமிழகத்தில் இதுவரை 31,74,849 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து இன்று தமிழகத்திற்கு வந்த 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 1,82,779 பேரும், பெண்கள் 1,20,007 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

* தமிழகத்தில் 12 வயதிற்குள் 14,883 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 2,49,826 பேரும், 60 வயதிற்கு மேல் 38,106 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.