ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்

ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்


சென்னை: 

அரசு பள்ளிகளில் 1, 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆக.,17 முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நேற்று வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை. 

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கு முழுவதுமாக வராத மாணவர்களுக்கு மட்டுமே தேர்ச்சி முடிவுகள் இல்லை. 

அரசு பள்ளிகளில் 1, 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆக.,17ம் தேதி முதல் தொடங்கும். 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை ஆக.,24ல் நடைபெறும்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னும் தணியவில்லை. இதனால் தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியமே இல்லை. கொரோனா தாக்கம் குறைந்ததும், மாணவர்களின் பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டு ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் இபிஎஸ் அறிவிப்பார். 

இவ்வாறு அவர் கூறினார்.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.