நிவர் புயல்: மக்கள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்!

நிவர் புயல்: மக்கள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்!  


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதியம் 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அருகில் உள்ள சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதியம் 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 21.55 அடியை எட்டியதால் பொதுப்பணித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நண்பகல் 12 மணியளவில் வினாடிக்கு 1000 கன அடிநீர் திறக்க உள்ளது.

எனவே, செம்பரம்பாக்கம் ஏரியின் மிகைநீர் அடையாறு ஆற்றின் வழியே கடலில் கலப்பதால் ஆற்றின் இருமடங்கிலும் உள்ள காணுநகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான்பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அருகில் உள்ள சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் 169 நிவாரண மையங்கள் தற்போது திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் உள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற உத்தரவு !

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை முழுவதும் உள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். நண்பகல் 12 மணிக்குள் அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். சென்னையில் பேனர் மற்றும் பெயர் பலகைகளை சம்பந்தப்பட்டவர்கள் அகற்ற வேண்டும் என கூறினார்.




கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.