'சல்லியர்கள்' படத்தின் விமர்சனம்
இந்தியன் சினிவே சார்பில், கிட்டு இயக்கத்தில் சத்யதேவி, S.கருணாஸ், திருமுருகன், ஜானகி, மஹேந்திரன், நாகராஜ், பிரியா, ஆனந்த் சௌந்தரராஜன், மோகன், சந்தோஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'சல்லியர்கள்'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
சிங்கப் பிரதேசத்தின் ராணுவத்தை எதிர்த்து போரிடும் தமிழ்ப் பிரதேச அமைப்பினர் காயம் அடைந்தால், அவர்களை காப்பாற்ற போர்க்களத்தில் ‘மெடிக்கல் பங்கர்’ என்ற தற்காலிக பதுங்கு குழி மருத்துவமனைகள் அமைக்கப்படுகிறது. அங்கு டாக்டர்கள் சத்யாதேவியும், மகேந்திரனும் பணியாற்றுகின்றனர்.
தமிழ்ப் பிரதேச அமைப்புகளின் மெடிக்கல் பங்கர்களை அழித்தால், அவர்களை வீழ்த்திவிடலாம் என்று திட்டமிடும் சிங்கப் பிரதேச ராணுவம், உடனடியாக விமான தாக்குதல் நடத்துகிறது. போராளிகள் என்றாலும், எதிரிகள் என்றாலும், உயிருக்கு போராடும் வீரர்களை காப்பாற்ற அந்த டாக்டர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து பணியாற்றுகின்றனர். பிறகு என்ன நடந்தது? என்பதே கதை களம்....
மருத்துவர் நந்தினி கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் சத்யதேவி, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அளவான உரையாடல், தெளிவான முடிவு, விவேகமான செயல்பாடு என்று தமிழ் ஈழ போராளி மருத்துவர்களை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்.
பதுங்கு குழியில் பணியாற்றும் அவரது உடல் மொழி, தோற்றம் என அனைத்தும் அவரை ஒரு நடிகையாக அல்லாமல் ஒரு மருத்துவ போராளியாகவே பார்வையாளர்கள் மனதில் பதிய வைத்து விடுகிறது.
மருத்துவர் செம்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேந்திரன், தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காண்பித்திருக்கிறார். நடிகர் மகேந்திரன் என்ற அடையாளம் எந்த இடத்திலும் தெரியாதது, அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
கலை இயக்குநர் முஜுபீர் ரஹ்மானின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள பதுங்கு குழி மருத்துவனை உள்ளிட்ட படத்தில் இடம் பெறும் சிறு சிறு விசயங்களில் கூட பல நுணுக்கள் இடம்பெற்றிருக்கிறது.
ஒப்பனை கலைஞர் அப்துல் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பூங்குழில் கிட்டு ஆகியோரது பணி கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் உண்மைக்கு நெருக்கத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் டி.கிட்டு, தமிழ் ஈழ விடுதலை போராளிகள் பற்றி இதுவரை சொல்லப்படாத விசயங்களை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதோடு, இனப் பாகுபாடின்றி உயிரைக் காப்பாற்றும் உயரிய நோக்குடன் செயல்படும் தமிழ் ஈழ போராளி மருத்துவர்களின் வாழ்வியலை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். எழுதி இயக்கிய தி.கிட்டு, எந்தவித பாகுபாடுமின்றி உயிரை காப்பாற்றும் குறிக்கோளுடன் செயல்படும் டாக்டர்களை பெருமைப்படுத்தி இருக்கிறார். ஆனால்
சில வன்முறை காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.....
மொத்தத்தில் இந்த 'சல்லியர்கள்' தமிழர்களின் நாடி துடிப்பு....
RATING 4/5

கருத்துரையிடுக