சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலருக்கு டாக்டர் முனைவர் பட்டம்!

சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலருக்கு டாக்டர் முனைவர் பட்டம்!


சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகா அரவிந்தன். ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை என்ற அமைப்பைத் தொடங்கி அதன் நிறுவன தலைவராக இருந்து வருகிறார். 

அதுமட்டுமல்லாமல் இயல்பாகவே உதவும் மனம் கொண்ட இவர் முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா தலைமையில்ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை நன்கு படித்த ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் எனப்படும் உதவித்தொகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். 

அதுமட்டுமல்லாமல் வருடத்திற்கு 10 ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கி வருகிறார்.. மேலும் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா  உயிர்க்கொல்லி நோய் தீவிரமடைந்த காலகட்டத்தில் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ச்சியாக உணவின்றி தவித்து வந்த மக்களுக்கு உணவு வழங்கியதோடு மட்டுமல்லாமல் தற்போது வரை அந்த பணியை தொடர்ந்து செய்து கொண்டுவருகிறார். 

இது போன்று எண்ணற்ற சமூக சேவை செய்ததை பாராட்டி GLOBAL HUMAN PEACE UNIVERSITY சார்பாக சென்னையில் நடந்த விழாவில் சேலத்தைச் சேர்ந்த நாகா அரவிந்தன் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான "டாக்டர் முனைவ‌ர்" பட்டம் வழங்கி பெருமைபடுத்தியது.

இந்த நிகழச்சியில் சமூக ஆர்வலர் நாகா அரவிந்தனுக்கு முனைவ‌ர் பட்டம் வழங்கி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, சட்ட பணிகள் ஆணை குழு நீதிபதி  மரியாதைக்குரிய S.K.கிருஷ்ணன் மற்றும் முன்னாள் சிறப்பு ஆணையர் முன்னாள் முதன்மை செயலளர் தமிழ்நாடு அரசு மரியாதைக்குரிய K.சம்பத்குமார் IAS அவர்களும் மனித உரிமை ஆணைய‌ம் டைரக்டர் Dr.A.C.மோகன்தாஸ் IAS  அவர்களும், நீதியின் குரல் சேர்மன் Dr.C.R.பாஸ்கரன் அவர்களும், முன்னாள் துணை ஆணையளர் காவல் துறை சென்னை மரியாதைக்குரிய M.கருணாநிதி அவர்களும், இந்தியன் வளர்ச்சி அறக்கட்டளை,  மரியாதைக்குரிய Dr.k.வளர்மதி அவர்களும் சிறப்பு டாக்டர் முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தனர். 

பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியினை நாகா அரவிந்தன் தெரிவித்துக் கொண்டார்.லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.