இந்தியாவில் புதிதாக 43 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் புதிதாக 43 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா!



நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும்கூட, ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பது கவலை அளிக்கும் அம்சமாக அமைந்துள்ளது.

அந்த வகையில் இன்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து கிட்டத்தட்ட 43 ஆயிரம் என்ற அளவை (சரியாக 43 ஆயிரத்து 846) எட்டியுள்ளது.

இதன்மூலம் இதுவரை அந்த தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்து 99 ஆயிரத்து 130 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு ஆளாகி பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சையின் பலனாக குணம் அடைகிறவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிப்பது ஆறுதல் அளிக்கும் அம்சமாக இருக்கிறது.

நேற்று முன்தினம் 23 ஆயிரத்து 653 பேர் குணம் அடைந்த நிலையில், இன்று ஒரே நாளில் 22 ஆயிரத்து 956 பேர் குணம் அடைந்து, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பி இருக்கிறார்கள். இதன்மூலம் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து நாட்டில் மீண்டோர் எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 30 ஆயிரத்து 288 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்காக பெற்று வந்த சிகிச்சை பலன் தராத நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 197 பேர் இந்தியாவில் உயிரிழந்திருக்கிறார்கள். 

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை என்பது 1 லட்சத்து 59 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 11-வது நாளாக இன்றும் உயர்ந்தது. இங்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 09 ஆயிரத்து 087 ஆக இருக்கிறது. 

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 03 ஆயிரத்து 841 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.