My Cavin’s-ன் புதிய ஷாப் & டைன்!

My Cavin’s-ன்  புதிய ஷாப் & டைன்! 


இந்தியாவில் எஃப்எம்சிஜி துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் கவின்கேர் குழுமம்ஒரு புதிய ஷாப் & டைன் அமைவிடத்தை My Cavin’s என்ற பிராண்டின் பெயரில் சென்னை மாநகரில் இன்று அறிமுகம் செய்திருக்கிறது.  

கேகே நகரில் அமைந்திருக்கின்ற இந்த நவீன புதிய கஃபேஉணவுப் பிரியர்களுக்கும்ஆர்வலர்களுக்கும் பல்வேறு சுவைகளில் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான சாட் ஈட்ஸ் எனப்படும் சிற்றுண்டிகளின் தொகுப்பை வழங்குவதோடுபுகழ்பெற்ற இந்திய சாலை உணவுப்பொருட்களில் சிறப்பானவற்றையும் சேர்த்து வழங்கவிருக்கிறது.  

ரூ.70 என்ற விலை வரம்பிலிருந்து தொடங்குகின்ற My Cavin’s  ன் சுவை மிக்க உணவுகளும்பானங்களும் ஒட்டுமொத்த குடும்பத்தின் உணவுத்தேவைகளை முழுமையாகப் பூர்த்திசெய்து அவர்களின் சுவை நரம்புகளுக்கு உணவூட்ட தயாராக இருக்கிறது


நடிகையும்-பின்னணி பாடகியுமான மிஸ்ஷிவாங்கி கிரிஷ்:

 இந்த புத்தம் புதிய உணவகத்தை தொடங்கி வைத்தார்தமிழக தொலைக்காட்சி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் இவரது சேட்டைகளும்அதிரடி பேச்சுகளும் ஷிவாங்கிக்கு மிகச்சிறப்பான இடத்தை மக்கள் மனதில் பெற்றுத் தந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1000 சதுரஅடி பரப்பளவில் விசாலமாக அமைந்திருக்கும் My Cavin’s, மில்க் ஷேக்லஸ்ஸிமோர்பன்னீர்தயிர்பால் ஆகிய பேக்கிங் மற்றும் குளிர்பதனம் செய்யப்பட்ட தயாரிப்புகளின் தொகுப்பையும் நுகர்வோர்களுக்கு வழங்கும்.  அத்துடன்கவின்கேர் நிறுவனத்தின் பிரபல பால்பண்ணை பிரிவான கவின்ஸ் – ன் தயாரிப்புகளும் இங்கு கிடைக்கும்.  அனுபவம் மிக்க உணவுத்துறை நிபுணர்களின் ஒரு குழுவால் மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் 150-க்கும் அதிகமான உணவுகள் மற்றும் பானங்கள் இந்த கஃபே – ன் மெனுவில் இடம்பெற்றிருக்கின்றன

 ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் அற்புதமான உட்புற அலங்காரத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கஃபேமனதை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள ஏதுவாக்கும் உற்சாகமான சூழலை இங்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்குவது நிச்சயம்

இங்கு அமர்ந்து உணவருந்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் வாடிக்கையாளர்களின் சுவை நரம்புகளை தூண்டிவிடுகின்ற பல்வேறு சாண்ட்விச்களை கேட்டவுடன் தயார் செய்து சுவைபட வழங்குவதற்கென ஒரு சாண்ட்விச் ஸ்டேஷனும் இடம்பெறுகிறது

My Cavin’s அறிமுகம் குறித்துப்பேசிய இந்நிறுவனத்தின் இயக்குனர்

 திருமனு ரஞ்சித்:

 சுவையான மற்றும் அற்புதமான உணவு வகைகளை வழங்கும் My Cavin’s – ன் முதல் அவுட்லெட் தொடங்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியும்உற்சாகமும் தருகிறது.  பல்வேறு உணவுப் பழக்கங்களையும்விருப்பங்களையும் கொண்டிருக்கின்ற பலதரப்பினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் சுவையான பல்வேறு உணவுகள் மற்றும் பானங்களை உள்ளடக்கிய ஒரு மிக புதுமையான மெனுவை உருவாக்கியிருக்கும் நிபுணத்துவம் மிக்க சமையற்கலை கலைஞர்கள் இந்த கஃபே – ல் பணியாற்றுகின்றனர்.  பல்வேறு தயாரிப்புகளின் விரிவான அணிவரிசையைக் கொண்டு மக்களின் வாழ்க்கையை அதிக மகிழ்ச்சியானதாக மாற்றி இலட்சக்கணக்கான குடும்பங்களின் அபிமானம் மிக்க ஒரு குடும்ப பிராண்டாககவின்ஸ் தொடர்ந்து இருந்து வருகிறது. என்று கூறினார். 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.