பா.ரஞ்சித் இயக்கிய "ரைட்டர்"
தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித் தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப் இயக்கும் ரைட்டர் படத்தினை தயாரிக்கிறார். இதில் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் , கோல்டன் ரேசியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் , மற்றும் ஜெற்றி புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.
சமுத்திரக்கனி இந்த படத்தில் காவல்துறையில் பணிபுறியும் ரைட்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிகார மையத்தில் பணிபுரியும் ஒரு எளிய மனிதனாக இயல்பான வாழ்வை வாழ்பவராக நடித்திருக்கிறார். ஹரிகிருஷ்ணன் , இனியா, இயக்குனர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்
வழக்கமான சமுத்திரக்கனியை இந்தப்படத்தில் பார்க்கமுடியாது, இது அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் பிராங்ளின். இன்று ரைட்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
ஒளிப்பதிவு பிரதீப் காளிராஜா
கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
யுகபாரதி, முத்துவேல் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்
எடிட்டிங் - மணிகண்டன் சிவக்குமார்
சண்டைப்பயிற்சி - சுதேஷ்
கலை - ராஜா
நடனம் - சதீஷ்
தயாரிப்பு -
பா.இரஞ்சித்,
அபையானந்த் சிங்,
பியூஸ் சிங்,
அதிதி ஆனந்த்.
கருத்துரையிடுக