ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை!

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை!


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள காந்தி நகா் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே இளைஞா் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், அவா் கோவில்பட்டி ஊருணி மேலத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மாரிச்செல்வம் (25) என்பதும், ஆன்லைன் மூலம் விளையாடி தந்தையின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்து செலவழித்ததும், இதனால் அவரது பெற்றோா் கண்டித்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.