பொங்கலுக்கு சென்னையில் பிரமாண்ட கலை விழா!

பொங்கலுக்கு சென்னையில் பிரமாண்ட கலை விழா!


சட்டசபையில், தொல்லியல் துறை மானிய கோரிக்கைக்கு பதிலளித்த பின், அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:


* 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாட்டுப்புற கலையை உலகம் முழுதும் கொண்டு செல்லவும், அக்கலைஞர்களுக்கு உதவும் வகையிலும், நாட்டுப்புற கலையை 75 ஒளிப்படங்களாக தயாரித்து, இணைய வழியில் வெளியிடப்படும். இதற்கென செலவினமாக 1.64 கோடி நிதி ஒதுக்கப்படும்

* பொங்கலை ஒட்டி, தமிழக பாரம்பரிய கலைகளின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில், பிரமாண்ட கலை விழா, சென்னை மாநகராட்சி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை போன்ற பல்வேறு துறைகள் ஒத்துழைப்புடன், ஆண்டு தோறும் ஆறு இடங்களில், மூன்று நாட்கள் நடத்தப்படும். இணையவழி வாயிலாகவும் நடத்தப்படும்; இதற்கு 91 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்

* சென்னை அரசு அருங்காட்சியகத்தில், தொல்பொருளியல் தொகுப்பு காட்சி கூடங்களை விரிவுபடுத்தும் வகையில், 22.81 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்படும். சேமிப்பில் உள்ள அரும்பொருட்கள் பன்னாட்டு தரத்தில் காட்சியமைக்கப்படும்

* அரசு அருங்காட்சியகங்களில் உள்ள அனைத்து அரும்பொருட்களையும், அறிவியல் முறையில் பாதுகாத்து, எண்ணிலக்கம் செய்து, ஆவணப்படுத்தி, மெய்நிகர் காட்சி கூடங்களாக வடிவமைத்து, வலைதளத்தில் பதிவேற்றும் பணி, 5 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்

* சிவகங்கை மாவட்டம் கீழடியில், உலகத்தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ்வைப்பக கட்டுமான பணி, 12.21 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. இந்த அகழ் வைப்பகத்திற்கு 34 நிரந்தர பணிகள் தோற்றுவிக்கப்படும். அகழ்வைப்பக பராமரிப்பு பயன்பாட்டிற்கு தொடரும் செலவினமாக 1.38 கோடி ரூபாய்; தொடரா செலவினமாக 20 லட்சம் ரூபாய் என்று மொத்தம் 1.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்

* தமிழக தொல்லியல் நிறுவனம், தமிழக தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் என்று பெயர் மாற்றப்படும். இந்நிறுவனம் வாயிலாக, இரண்டு ஆண்டு தொல்லியல் முதுநிலை டிப்ளமா வகுப்பு நடந்து வருகிறது. இந்த ஆண்டு முதல், கல்வெட்டியலில் இரண்டு ஆண்டுகால முதுநிலை டிப்ளமா வகுப்பு துவங்கப்பட உள்ளது. பட்டய வகுப்பு நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.