1987 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு!

1987 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு!


பொதுவாக பள்ளி பருவம் என்றாலே ஒரு மகிழ்ச்சி தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருங்காலத்தில் உடன் இருக்கும் நண்பர்கள் எப்படி இருக்க போகிறார்கள் என்பது சற்றும் தெரியாத உண்மையான இளம் பருவ நட்பே அந்த நட்பு. பள்ளியில் ஒன்று கூடி உணவு பரிமாறி கொள்வது, சண்டை போடுவது, சிறிய தவறு நண்பன் செய்தாலும் ஆசிரியரிடம் சொல்லி கொடுப்பது, நண்பர்களுடம் வெளியே செல்வது போன்ற சம்பவங்கள் எப்போது நினைத்தாலும் இனிக்கும் என்றே கூறலாம். 

இளமையில் இருக்கும் தோற்றம் பருவ மாற்றம் அடையும் போது  இருக்காது. இப்படி 33 ஆண்டுகள் கழித்து தன் நண்பர்களை பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. வாலாபேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் 1987 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பின் கூட்டம் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற தன் ஆசிரியருக்கு பாராட்டு கூறும் வகையிலும் இந்த சந்திப்பு பள்ளியில் நடைபெற்றது. 

அதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவர்கள் தீன தயானன், கல்யாண சுந்தரம், அக்பர், உஷா, பிரகாசம், ரோஸ்லின், கல்யாணி (ஸ்டான்லி), சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பிரகாசத்திற்கு மரியாதை செலுத்தினர். நீண்ட வருடத்திற்கு பிறகு தன் நண்பர்களுடன் இருக்கும் இந்த தருணம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து அன்பு கண்ணீருடன் சென்றனர்.    

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.