சசிகுமார் நடிப்பில் ‘அயோத்தி’

சசிகுமார் நடிப்பில் ‘அயோத்தி’


பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன், சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார். 'அயோத்தி' என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று மந்திர மூர்த்தி கூறினார்.

படத்தை பற்றி அவர் மேலும் கூறுகையில்:

"எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியது இந்தப் படம். இந்த கதையோடு மக்கள் அவர்களை எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான ஒரு கதை இது. கதையை கேட்டவுடன் சசிகுமார் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்," என்றார். 

மதுரை, ராமேஸ்வரம் பின்னணியில் உருவாகும் திரைப்படத்துக்கு ‘அயோத்தி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, “இந்த படத்திற்க்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணத்தை இப்போதே கூறுவது நன்றாக இருக்காது,” என்றார். 

'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். என் ஆர் ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். 

இதர படக்குழுவினரின் விவரம் வருமாறு:

கலை- துரைராஜ் 

படத்தொகுப்பு- சான் லோகேஷ் நடனம்- ஷரீப் 

சண்டைக்காட்சிகள்- பிரபு 

மக்கள் தொடர்பு- நிகில் முருகன் 

நிர்வாக தயாரிப்பாளர்- தினேஷ் கண்ணன் 

தயாரிப்பு நிர்வாகி- செல்வம்-அஷ்ரப் 

தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் சக்தி ரூபிணி-ஜெயராம்  

இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி மந்திரமூர்த்தி இயக்குகிறார். 


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.