வாக்குறுதியோடு உற்பத்தியை தொடங்கும் பூம் மோட்டார்ஸ்!
“பருவநிலை மாற்றம் என்பதே நமக்கு முன் இருக்கின்ற மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் மாசுக்கான மிகப்பெரிய காரணமாக இருக்கும் வாகனங்களினால் ஏற்படும் மாசுவை முற்றிலுமாக ஒழிப்பதை எமது குறிக்கோளாகவும், செயல்திட்டமாகவும் நாங்கள் கொண்டிருக்கிறோம்,” என்று பூம் மோட்டார்ஸ் – ன் தலைமை செயல் அலுவலர் திரு. அனிருத் ரவி நாராயணன் கூறினார்.
இந்தியாவின் அதிக நிலைப்புத்தன்மையுள்ள நீண்டகாலம் நீடிக்கின்ற பைக் என்ற அடைமொழியுடன் இந்நிறுவனம், பூம் கார்பெட் பைக்கை இன்று அறிமுகம் செய்திருக்கிறது. இந்த பைக்கில் 2.3 kWh திறனுள்ள பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதால் 200 கி.மீ. தூரம் வரை இதனை இயக்க முடியும். இதனை 4.6 kWh எனவும் இரட்டிப்புத் திறனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். இந்த பேட்டரிகளை எளிதில் மாற்றிக்கொள்ளலாம்; சார்ஜ் செய்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் வெளியில் நிறுவப்பட வேண்டும் என்ற தேவையை அகற்றும் வகையில் எந்தவொரு வீட்டிலும் சார்ஜிங் செய்துகொள்ளக்கூடிய ஒரு போர்ட்டபிள் சார்ஜருடன் இந்த பேட்டரிகள் கிடைக்கின்றன. இரண்டு பேட்டரி விருப்பத்தேர்வோடு கூடிய பைக், 75 kmph என்ற உயர்வேகத்திறனை எளிதாக எட்டும். 200 கி.கி. எடை தாங்கும் திறனுடன் கூடிய இந்த பைக், நமது நகரங்களில் மிக செங்குத்தான பாதைகள் / பாலங்களிலும் சிரமமின்றி ஏறக்கூடிய திறன்கொண்டது.
பூம் மோட்டார்ஸ் – ன் அறிமுகம் குறித்து பேசிய திரு. அனிருத்:
“மின்சார வாகனங்களுக்கு மாறும் செயல்திட்டத்தை சிறப்பாக ஊக்குவிக்க அந்த வாகனங்கள், வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு, வசதி மற்றும் மனநிம்மதியை வழங்குவதாக இருக்கவேண்டுமென்றும் அப்போதுதான் மக்கள் அதிக எண்ணிக்கையில் இதற்கு மாறுவார்கள் என்றும் பூம் மோட்டார்ஸ் நம்புகிறது. இவ்வகையினத்தில் எமது மிகச்சிறந்த மதிப்பை நிரூபிக்கும் வகையில், எமது வாகனங்களை வாங்குவதற்கு ஐந்து ஆண்டுகள் இஎம்ஐ வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற முதல் நிறுவனமாக பூம் மோட்டார்ஸ் களமிறங்கியிருக்கிறது. ஒரு மாதத்திற்கான இந்த இஎம்ஐ (சம மாத தவணைத் தொகை) ரூ.1699 என்பதிலிருந்து தொடங்குகிறது. பெட்ரோலுக்காக பல நபர்கள் செலவிடுகின்ற மாதாந்திர தொகையை விட இது குறைவு. வாடிக்கையாளர்களின் வசதிக்காக, எந்த இடத்திலும் பைக்கை சார்ஜ் செய்துகொள்ள வகை செய்கிறவாறு ஒரு போர்ட்டபிள் சார்ஜருடன் கூடிய, மாற்றக்கூடிய பேட்டரியை நாங்கள் வாங்குகிறோம். இப்போது, அடுக்குமாடி வீடுகள், அலுவலகங்கள், மால்கள் போன்றவற்றில் பேட்டரிகளுக்கு சார்ஜிங் செய்வதில் பல நபர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சனையிலிருந்து மக்களுக்கு எமது திட்டத்தின் மூலம் நாங்கள் விடுதலையளிக்கிறோம். நம் நிம்மதிக்காக, நாடு முழுவதிலும் சர்வீஸ் தொடுமுனை வசதியையும், சாலையோர சர்வீஸ் உதவி திட்டத்தையும் நாங்கள் தருகிறோம்; அதுமட்டுமின்றி, குறைவான டவுன்டைம் உடன் நிகரற்ற நிலைப்புத்தன்மை கொண்டிருக்கின்ற ஒரு பைக்காக எமது தயாரிப்பு திகழ்கிறது,” என்று கூறினார்.
இதுவரையிலான பூம் மோட்டாரின் பயணம் குறித்து மேலும் பேசிய அவர், “உலகளவில் பருவநிலை மாற்றம் ஒரு மிக முக்கிய பிரச்சனையாக இருக்கிறது; வீணடிப்பதற்கு நமக்கு நேரமில்லை என்று நான் நம்புகிறேன். எமது நிறுவனத்தின் இணை நிறுவனர் வினோதம் மற்றும் பூம் மோட்டார்ஸின் ஒட்டுமொத்த குழுவினரும் கடந்த 2 ஆண்டுகளாக தளர்வின்றி, ஓய்வொழிச்சலின்றி பணியாற்றி இத்தயாரிப்பை சாதனை காலஅளவிற்குள் சந்தையில் அறிமுகம் செய்வதில் வெற்றி கண்டிருக்கிறோம். வேறுபல EV ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் போலல்லாமல் ஒரு ஆண்டிற்கு 100K (ஒரு இலட்சம்) பைக்குகளை தயாரிக்கும் திறனுள்ள தொழிலகத்தை கோயம்புத்தூரில் நாங்கள் நிறுவியிருக்கிறோம். எமது தயாரிப்பு பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது மற்றும் தயாரிப்பு எண்ணிக்கையை இன்னும் உயர்த்தும் நடவடிக்கையில் இப்போது நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். தயாரிப்புக்கான பாகங்களை வழங்கும் செயல்முறையை இந்தியாவிற்கும் இருக்குமாறு செய்திருப்பது மட்டுமின்றி, உதிரிபாகங்களின் கணிசமான அளவு தமிழ்நாடு மாநிலத்திலிருந்தே பெறப்படுகிறது. இதன்மூலம் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளை பூம் மோட்டார்ஸ் உருவாக்கியிருக்கிறது.
ஒட்டுமொத்த நாட்டில் மிகச்சிறந்த மின்சார வாகனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குழுவை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். எமது குழுவினரின் சாதனைகளில் உண்மையிலேயே நான் அதிக பெருமை கொள்கிறேன். மின்சார வாகனங்கள் மீது தொழில்நுட்ப ஆதாயத்தை இந்தியாவிற்கு வழங்கப்போகின்ற மிக முக்கிய தொழில்நுட்பங்கள் மீது பல காப்புரிமைகளை நாங்கள் பெற்றிருக்கிறோம். எடுத்துக்கட்டாக, அநேகமாக இந்தியாவிலேயே மிகச்சிறந்த பேட்டரி தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். எமது பேட்டரி முற்றிலும் தீயெதிர்ப்பு திறன் கொண்டிருப்பதோடு, மிக நீண்டகாலம் நீடிக்கக்கூடியது. பேட்டரி மீது வழக்கமாக 3-ஆண்டுகள் மட்டுமே வாரண்ட்டி வழங்கப்படுகின்ற நிலையில், 5-ஆண்டுகள் வாரண்ட்டியை எங்களால் வழங்க முடிந்திருப்பதே இதன் திறனுக்கான சான்றாகும். மேலும், அதற்கான சொந்த இயக்க அமைப்பை உள்ளேயே இயக்கக்கூடிய திறன் பெற்றிருக்கின்ற இந்த பேட்டரியை சூப்பர் இன்டலிஜென்ட் என்று அழைக்கலாம்.
எவ்வித வெளியார்ந்த VC/PE முதலீடு இல்லாமல் இவை அனைத்தையுமே மிக சிக்கனமான வழிமுறையில் நாங்கள் செய்து சாதித்திருக்கிறோம். இந்தியாவில் இவ்வாறு செய்கின்ற முதல் நிறுவனமான எமது பயணம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இது எங்களது முதல் தயாரிப்பு மற்றும் எங்களது முதல் தொழிலகம் மட்டுமே. கூடியவிரைவில் இன்னும் அதிக எண்ணிக்கையில், தனித்துவமான, புத்தாக்கமான தயாரிப்புகள் எங்களிடமிருந்து வெளிவருவதை நீங்கள் காணப்போகிறீர்கள். 130 கோடி மக்கள்தொகை கொண்ட தேசம் நமது இந்தியா. ஒரேயொரு வாகனத்தின் மூலம் நமது மக்கள் அனைவரின் விருப்பங்களை பூர்த்திசெய்ய இயலாது என்பதை நாங்கள் அறிவோம்,” என்று கூறினார்.
பூம் கார்பெட் குறித்து:
“உலகின் வேறுபிற பைக்கை போன்றதல்ல பூம் கார்கள். அழகு, திடகாத்திர திறன் மற்றும் நுண்ணறிவு அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு கலவை இது. இந்த பைக்கில் நீங்கள் பயணிக்கும்போது எந்த இடமாக இருந்தாலும், மக்கள் தங்களது தலையை திருப்பி இதை கண்கொட்டாமல் காண்பதை நீங்கள் பார்ப்பீர்கள். வலுவான, திடகாத்திரமான மற்றும் அதிக நாள் உழைக்கக்கூடிய பைக்காக இந்தியாவில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிலும் இது இருக்கிறது. அதிக இழுவிசை திறன் கொண்ட ஸ்டீல் – ல் உருவாக்கப்பட்ட ஒரு எக்ஸோ – ஸ்கெலிட்டல் டபுள் கிரேடிள் சேசிஸ் மூலம் நீண்ட காலம் இயங்கும் வகையில் மிக உறுதியாக இதை நாங்கள் கட்டமைத்திருக்கிறோம். எங்கு போக விரும்பினாலும் அழைத்துச் செல்லக்கூடிய திறன்கொண்ட பைக் இது. நகர்புறத்தில் மட்டும் ஓட்டுவதற்குரிய திடகாத்திரமற்ற, பலவீனமான ஸ்கூட்டர் அல்ல இது. பெட்ரோல் சேமிப்பு கணக்கிடல் வசதி, விபத்து மற்றும் திருட்டைக் கண்டறியும் திறன் மற்றும் பெற்றோருக்கான மோடு போன்ற நுண்ணறிவான அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இத்தனை வசதிகளும், திறன்களும் கொண்ட இந்த பைக், ரூ. 89,999 என்ற நம்ப முடியாத விலையில் எங்களால் வழங்க முடிந்திருக்கிறது. இந்த வாகனங்களுக்கு அரசு மானியம் கிடைக்குமானால், இதைவிட இன்னும் குறைவான விலையில் கூட இதை எங்களால் வழங்க முடியும்,” என்று கூறினார்.
பூம் மோட்டார்ஸ், அதன் பைக்கிற்கான முன்பதிவு செயல்முறையை 2021 நவம்பர் 12, நாளை முதல் தொடங்குகிறது. அறிமுக சிறப்புத்தள்ளுபடி ரூ.3000 – ஐ உறுதி செய்வதற்கும், டெலிவரிகளுக்கான வரிசை முறையில் உங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், ரூ.499 என்ற தொகையை செலுத்துவது ஆன்லைன் முன்பதிவில் அவசியமாகும். 2022 ஜனவரி முதல் தனது ரீடெய்ல் டெலிவரிகளை இந்நிறுவனம் தொடங்கும்.
கருத்துரையிடுக