கலர்ஸ் தமிழில் புத்தம் புதிய கிரைம் டாக்கு – டிராமா!

கலர்ஸ் தமிழில் புத்தம் புதிய கிரைம் டாக்கு – டிராமா!


ஜகமே தந்திரம் கதைகள் ஆரம்பம், 2021 டிசம்பர் 27 முதல் தொடங்கும் இந்நிகழ்ச்சி, திங்கள் முதல் சனி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மற்றும் இதனை நடிகர் செந்தில் குமார் தொகுத்து வழங்குகிறார்.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் தனது பல்வேறு நிகழ்ச்சிகளின் வெற்றியை இன்னும் வலுவாக்கும் வகையில் தமிழ்நாட்டின் மிக இளைய பொதுப் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், ஜகமே தந்திரம் கதைகள் என்ற பெயரில் ஒரு புத்தம் புதிய கிரைம் டாக்கு – டிராமா நிகழ்ச்சியை தொடங்குவதன் மூலம் அதன் க்ரைம் டைம் தொகுப்பினை இன்னும் சுவாரஸ்யமானதாக ஆக்குகிறது. 

நிஜ-வாழ்க்கையில் நடந்த குற்றச் செயல்களின் பரபரப்பான விவரணையை இந்த பிரைம் சீரிஸ் மிக நேர்த்தியாக கதை வடிவத்தில் மக்களின் பார்வைக்கு வழங்குகிறது.  இந்த நிகழ்ச்சியை வழங்குவதற்கு பிரபல நடிகர் செந்தில் குமார் அவர்களுடன் கலர்ஸ் தமிழ் கைகோர்த்திருக்கிறது.  ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10:30 மணிக்கு இந்த அதிரடியான நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.  2021 டிசம்பர் 27, திங்கள்கிழமை இரவு 10.30 மணிக்கு முதன் முதலாக ஒளிபரப்பாகிறது.  

இப்புதிய நிகழ்ச்சியின் தொடக்கம் குறித்து கலர்ஸ் தமிழ் சேனலின் பிசினஸ் ஹெட் திரு. எஸ். ராஜாராமன் கூறியதாவது:

“தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வரும் பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் இதுவரை புதுமையான, புதிய பாதை வகுக்கின்ற நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்திருக்கிறது.  எமது நெடுந்தொடர் புதின நிகழ்ச்சிகள், எண்ணற்ற ரசிகர்களின் மனம் கவர்ந்த கிளாசிக்குகளாக நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த அணிவரிசையில் மற்றுமொரு மர்மமும், பரபரப்பும் கொண்ட இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறோம்.  சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்வுகளின் ஒரு பிரதிபலிப்பாக ஜகமே தந்திரம் கதைகள் இடம்பெறும். 

சமூகத்திலுள்ள மிக முக்கிய சிக்கல்கள் பலவற்றின் மீது விழிப்புணர்வை உருவாக்க, மக்களின் குரலாக பிரபல நடிகர் செந்தில் குமார் தொகுப்பாளராக இந்நிகழ்ச்சியை வழங்குகிறார். நமது சமூகத்தில் மறைந்திருக்கின்ற சாத்தியமுள்ள ஆபத்துகள் பற்றி எமது பார்வையாளர்களின் விழிப்புணர்வு நிலையை இந்நிகழ்ச்சி நிச்சயம் மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.  இத்தகைய சாத்தியங்கள் இருப்பதை எதிர்பார்த்து அவைகளை சிறப்பாக எதிர்கொண்டு சமாளிக்க இந்நிகழ்ச்சி அவர்களுக்கு உதவும் என்பது எங்களது நம்பிக்கை.”

ஆரம்பத்தில் 30 எபிசோடுகளாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி குடும்ப வன்முறை, தவறான நடத்தை, போலீஸின் சித்ரவதை மற்றும் அராஜகம், மாணவர்களின் தற்கொலைகள், பாலின ரீதியில் பாகுபாடுகள், ஆன்மீகத்தின் பெயரில் நடைபெறும் ஏமாற்று வேலைகள் மற்றும் மோசடிகள் போன்ற பல்வேறு சமூக பிரச்சனைகள் மீது தமிழ் பேசும் பார்வையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க முயற்சிக்கும்.  

விரும்பத்தகாத இத்தகைய நிகழ்வுகளில் பாதிப்பிற்கு ஆளாகுபவர்களாக இருப்பதை எப்படி தவிர்க்கலாம் என்பதை பார்வையாளர்கள் அனைவருக்கும் சரியான, செய்தியாக வழங்குவதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.  நாடெங்கிலும் நடைபெற்று மக்கள்  மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிஜ-வாழ்க்கை சூழ்நிலைகளின் சுவாரஸ்யமான மறுஉருவாக்கங்கள் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.  என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய ஒரு உண்மையான தகவலையும், உணர்வையும் இதன்மூலம் பார்வையாளர்களுக்கு அது வழங்கும்.  


இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது பற்றி தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட நடிகர் செந்தில் குமார்:

“சமுதாயத்தின் பாதிக்கப்பட்ட ஒரு பிரிவின் பிரதிபலிப்பாக இருக்கும் ஜகமே தந்திரம் கதைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எனக்கு கிடைத்திருக்கும் கௌரவமாகும்.  இந்நாட்டில் பல நபர்கள் எதிர்கொள்கின்ற இத்தகைய முக்கியமான பிரச்சனைகள் பற்றி இந்நிகழ்ச்சியின் மூலம் விவாதிக்க கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு எனக்கு பல விஷயங்களில் எனது கண்ணோட்டத்தை விரிவாக்கி உண்மை நிலையை உணரச் செய்திருக்கிறது.  இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு நான் உணர்ந்தது போலவே பார்வையாளர்களும் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்.  இந்நிகழ்ச்சியை தொகுத்து பார்வையாளர்களுக்கு வழங்கும் அந்த நாளை நான்  ஆவலோடு எதிர்நோக்குகிறேன்,” என்று கூறினார். 

இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு ஒரு முன்னோட்டமாக கலர்ஸ் தமிழ் அதன் ஹேண்டில்கள் அனைத்திலும் ஒரு புதுமையான சமூக ஊடக பரப்புரையையும் தொடங்கியிருக்கிறது.   சமுதாயத்தில் நிகழும் சமூக அநீதி தொடர்பான அவர்களது கருத்துகளையும், அனுபவங்களையும் தைரியமாக ஒலிக்கச் செய்ய மக்களை இது ஊக்குவிக்கும். குடும்ப வன்முறை / குடும்பத்தில் தவறான நடத்தை, பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் / தொந்தரவு மற்றும் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் ஆகியவை மூன்று முதன்மையான கருத்தாக்கங்களாக இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.   

இந்நிகழ்ச்சியின் ஹேஷ்டேக்குகள் கீழ்வருமாறு:

#JagameThandhiramKadhaigal #JTK #RJSenthil #ColorsTamil #ManasaatchiyinKural இந்நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஏற்கனவே அவர்களது அனுபவங்களை பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள தொடங்கியிருக்கின்றனர்.  இத்தகைய பிரச்சனைகள் மீது பொதுமக்களின் மனதையும், உணர்வையும் தட்டியெழுப்ப இந்த சேனல் முற்படுகிறது; சில ஆண்டுகள் கழித்து பேசுவதற்குப் பதிலாக, இந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்ற அதே தருணத்தில் இவைகளுக்கு எதிராக ஒவ்வொருவரும் தைரியமாக உரக்கக்குரலில் பேசுவது முக்கியம் என்று இந்த சேனல் கருதுகிறது.  

நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் நடைபெற்ற மயிர்கூச்செரியச் செய்யும் நிஜ நிகழ்வுகளின் கதைகளைக் காண திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுங்கள்.    அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண  VOOT-ஐ டியூன் செய்யலாம்.



லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.