'மரைக்காயர்' திரைப்பட விமர்சனம்
நடிகர்: | மோகன்லால், பிரபு, அர்ஜுன் |
நடிகை: | கீர்த்தி சுரேஷ் |
இயக்குனர்: | பிரியதர்ஷன் |
இசை: | ராகுல் ராஜ் |
ஓளிப்பதிவு: | திருநாவுக்கரசு |
2021-ம் ஆண்டில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்று மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம். இந்த ஆண்டு வழங்கப்பட்ட திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளில், சிறந்த திரைப்படம், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஆடை வடிவமைப்பு போன்ற பிரிவுகளில் மூன்று விருதுகளை வென்றிருக்கிறது இத்திரைப்படம். 2019-ம் ஆண்டு முதல் ரிலீஸுக்காக காத்திருந்து, ஓடிடியில் நேரடியாக வெளியாக இருக்கிறது என அறிவிக்கப்பட்டு பின்பு ஒரு வழியாக தியேட்டரில் வெளியாகி இருக்கிறது.
16-ம் நூற்றாண்டில் கேரளாவில் போர்ச்சுகீசிய படைகளை எதிர்த்து போரிட்ட குஞ்சாலி மரைக்காயரின் கதைதான் இந்த மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம். பிறந்தது முதலே அம்மாவின் பிள்ளையாக வளரும் குஞ்சாலி மரைக்காயர், மக்களின் மன்னனாக, சாமுத்திரி சாம்ராஜ்யத்தின் கடற்படை தளபதியாக உயர்ந்து, வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு உயிர் தியாகம் செய்த வரலாற்று கதையை பேசுகிறது இப்படம்.
சாமுத்திரி ராஜ்யத்தைச் சேர்ந்த ஆர்ஷாவுக்கும், குஞ்சாலியின் பாதுகாவலன் சின்னாலிக்கும் காதல் ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகளும், வெள்ளையர்களிடம் இருந்து கேரள மண்ணையும், மக்களையும் குஞ்சாலி காப்பற்றினாரா, போரில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.
திரைப்படத்தின் மொத்த ரன் - டைம் 3 மணி நேரம். படத்தின் முழு நேரத்தை இன்னும் குறைத்திருக்கலாம். தியேட்டரில் வெளியாகி இருப்பதால், நேரம் இருப்பின், வரலாற்று திரைப்படங்களை காண ஆர்வம் இருப்பின் சலிக்காமல் ஒரு முறை பார்த்து வரலாம் இந்த மரைக்காயரை!
கருத்துரையிடுக