திரைப்பட விழாவில் திரையிடப்படும் கங்குபாய் கத்தியவாடி!
அலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'கங்குபாய் கதியாவாடி' பிப்ரவரி மாதம் 72 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கங்குபாய் கதியவாடி பெர்லினேல் ஸ்பெஷலின் ஒரு பகுதியாகத் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவின் முக்கிய அம்சம் மற்றும் அர்ப்பணிப்பு என்னவென்றால் சிறந்த சினிமாவை திரைப்பட விழாவின் மூலம் காண்பிப்பதாகும் . இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட படங்கள் கொரோனா தொற்றுநோய் காலத்தில் எடுக்கப்பட்டவை .
சினிமா உலகில் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 10வது படமான 'கங்குபாய் கத்தியவாடி' அவருக்கு மிகவும் ஸ்பெஷலான படமாகும் .
சஞ்சய் லீலா பன்சாலி கூறும்போது, "கங்குபாய் கத்தியவாடியின் கதை என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது, நானும் எனது குழுவினரும் இந்த கனவை சாத்தியமாக்குவதற்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளோம். மதிப்புமிக்க பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் எங்கள் படத்தைக் காண்பிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். "
பென் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் ஜெயந்திலால் கடா திரைப்படத் தேர்வு குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டவை , "திரு. பன்சாலி மீதும் அவரது உருவாக்கத்தின் மீதும் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் எங்கள் படம் திரையிடப்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது, ஆலியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்காக அஜய் தேவ்கனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் கதை."
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் கலை இயக்குனர் கார்லோ சத்ரியன் கூறுகையில், "பெர்லின் திரைப்பட விழாவில் கங்குபாய் கத்திவாடி திரைப்படத்தை திரையிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம், "
சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் டாக்டர் ஜெயந்திலால் கடா (பென் ஸ்டுடியோஸ்) ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படம் 18 பிப்ரவரி 2022 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கருத்துரையிடுக