IIRSI 2021 மாநாடு ஆரம்பம்!

IIRSI 2021 மாநாடு ஆரம்பம்!

கண் அறுவைசிகிச்சை மீதான இந்தியாவின் மிகப்பெரிய வருடாந்திர மாநாடான IIRSI2021 நிகழ்வை தமிழ்நாடு மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடுஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மாண்புமிகு அமைச்சர் திருசிவவிமெய்யநாதன் தொடங்கி வைத்தார்.  

அந்த  IIRSIன் அறிவியல் கமிட்டியின் தலைவர் டாக்டர்மஹிபால் S. சச்தேவ்டாக்டர்அமீத் டரஃப்தார்டாக்டர்ஹிமான்ஷு மேத்தா மற்றும் IIRSI –ன் தலைமைச் செயலரும்டாக்டர்அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவருமான புரொஃபசர் அமர் அகர்வால்இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.  உள்விழி உள்வைப்பு மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சைக்கான இந்திய சங்கத்தால் நடத்தப்படுகின்ற இந்த இரண்டு நாள் நிகழ்வில் முன்னணி கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று கண் மருத்துவவியல் துறையில் குறிப்பாககண்புரை மற்றும் ஒளிவிலகலுக்கான அறுவைசிகிச்சையில் அவர்களது திறன்களை வெளிப்படுத்தவிருக்கின்றனர் மற்றும் இத்துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த ஆய்வுகளையும்விளக்கங்களையும் சமர்ப்பிக்கவிருக்கின்றனர்

சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடுஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மாண்புமிகு அமைச்சர் திருசிவவிமெய்யநாதன் இந்நிகழ்வில் உரையாற்றியபோது:


“36வது உள்விழி உள்வைப்பு மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சை மாநாட்டின் தொடக்கவிழா நிகழ்வில் பங்கேற்பது எனக்கு அதிக மகிழ்ச்சியளிக்கிறது.  இந்தியா முழுவதிலுமிருந்தும் மற்றும் பிற நாடுகளிலிருந்தும் வந்திருக்கும் மருத்துவர்கள் கலந்து கொள்கின்ற இம்மாநாடுகண் மருத்துவவியலில் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான புதிய வழிமுறைகள் உருவாக்கம் குறித்து ஒரு சிறப்பான தளத்தை இந்த மாநாடு உருவாக்குகிறதுசுகாதார பராமரிப்புத் துறையில்அதிலும் குறிப்பாக கண் மருத்துவவியலில் தென்னிந்தியாவும் மற்றும் தனிச்சிறப்போடு தமிழ்நாடும் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது.  கண் மருத்துவியலுக்கான பல பிரபல கல்வி நிறுவனங்கள் மற்றும் கண் மருத்துவமனைகளின் தாயகமாக தமிழ்நாடு திகழ்கிறது.   கண் நோய்கள் மற்றும் சீர்கேடுகளினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகமாகும்.  12 மில்லியன் பார்வைத்திறனற்ற நபர்கள் இந்தியாவில் இருக்கின்றனர் மற்றும் பார்வைத்திறன் பாதிப்பை சரிசெய்ய வேண்டிய நிலையில் கூடுதலாக 450 மில்லியன் நபர்கள் இருக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறதுஒரு மில்லியன் நபர்களில் பார்வைத்திறன் பாதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா முதன்மை வகிப்பது கவலைக்குரிய மற்றும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒரு முக்கிய பிரச்சனையாகும்IIRSI போன்ற மாநாடுகள்இந்திய கண் அறுவைசிகிச்சை நிபுணர்களின் திறன்களை மேலும் மேம்படுத்துவதில் ஒரு மிக முக்கிய பங்காற்றுகின்றன,” என்று கூறினார்.

 

IIRSI – ன் தலைமைச் செயலரும்டாக்டர்அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவருமான புரொஃபசர் அமர் அகர்வால்இந்நிகழ்வில் பேசுகையில்:

 “உலகளவில் கண் மருத்துவவியலில் நிகழ்ந்திருக்கும் புத்தாக்கங்களை மையமாகக் கொண்ட IIRSI – ன் இந்த வருடாந்திர மாநாடுஇந்தியாவின் கண் மருத்துவவியல் துறையின் காலண்டரில் ஒரு மிக முக்கிய நிகழ்வாக உருவெடுத்திருக்கிறதுஇந்த ஆண்டு நிகழ்வில்முதன்மையான கண் அறுவைசிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று இத்துறையில் சமீபத்திய முன்னேற்றங்க்ளை காட்சிப்படுத்தவிருக்கின்றனர்கண்புரை நோயின் சிக்கலான சூழ்நிலைகளை சமாளித்து சரிசெய்ய பல்வேறு வழிமுறைகளையும் மற்றும் அதற்கான அறுவைசிகிச்சை குறித்து கலந்துரையாடலின் வழியாக அறுவைசிகிச்சை மருத்துவர்கள் அறிந்துகொள்வதற்கு ஒரு சிறந்த தளத்தை இம்மாநாடு வழங்கும்.  நோயறிதல் செயல்பாடுகள் மற்றும் சிகிச்சை ஆகிய அம்சங்களில் இந்தியாவில் கண் மருத்துவத்துறையின் திறன்களையும் மற்றும் செயல் உத்திகளையும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பதில் IIRSI மிக முக்கிய பங்களிப்பை வழங்குவதாக இருந்து வருகிறது.” என்று கூறினார்.

 

உள்விழி லென்ஸ் (IOL) உட்பதிப்பு என்பதுமிகப்பொதுவான கண் அறுவைசிகிச்சைகளுள் ஒன்றாகும்.  ஆனால்சில நேர்வுகளில் கண்ணில் லென்ஸ் இல்லாத காரணத்தால் நோயாளிகளுக்கு அதன் பின்புல ஆதரவு இருப்பதில்லை.  அத்தகைய நேர்வுகளில் ஐரிஷ் கிளா லென்ஸ் என்பதை அறுவைசிகிச்சை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.  இதில் ஒரு ஆதாயம் இருக்கிறதுபுறவெளி விழித்திரைப்படலம் (ஐரிஷ்இடுக்கிகளுக்கு இடையே அடைபட்டு இருப்பதால்தையல்கள் இல்லாமல் இதனை விழித்திரை படலத்தோடு பொருத்த முடியும்,” என்று IIRSI – ன் தலைமைச் செயலரும்டாக்டர்அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவருமான புரொஃபசர் அமர் அகர்வால் மேலும் கூறினார்.

 

IOL உட்பதிப்பு மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சையில் அவர்களது அனுபவம் மற்றும் தொழில்நுட்பத்தில் நிகழ்ந்துள்ள மேம்பாடு பற்றி விவாதிக்கவும் மற்றும் முன்தடுப்பு செய்யக்கூடிய பார்வை திறனின்மைக்கான சிகிச்சைக்கு பங்களிப்பு வழங்கவும்இந்தியாவிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் கண் மருத்துவவியல் நிபுணர்களை ஒரு அமைவிடத்தில் ஒருங்கிணைப்பதே IIRSI 2021 – ன் நோக்கமாகும்.  சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் வெளிநாட்டு நிபுணர்களின் பேருரைகள்இளம் கண் மருத்துவர்களுக்கான அமர்வுஹேண்ட்ஸ் ஆன் வெட்லேப் பயிற்சி திட்டங்கள்ஆப்தால்மிக் ப்ரீமியர் லீக் போட்டிகண் மருத்துவவியலில் கோர்ட் மார்ஷியல்நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப் உடன் நடத்தப்படும் கருத்தரங்குகள், IIRSI திரைப்பட திருவிழா விருது நிகழ்ச்சி, IFFA, IIRSI நிழற்பட போட்டி ஆகியவை இம்மாநாட்டில் நடைபெறவிருக்கின்ற நிகழ்வுகளாகும்.  சென்னையில்ஐடிசி கிராண்டு சோழா ஹோட்டலில் டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களில் இந்நிகழ்வு நடைபெறுகிறது


FULL VIDEO HERE:

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.