எப்.ஐ.ஆர் திரைப்படத்தின் வெற்றி விழா!

எப்.ஐ.ஆர் திரைப்படத்தின் வெற்றி விழா! விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எப்.ஐ.ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து படக்குழுவினர் வெற்றி விழா கொண்டாடினர்.

இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எப்.ஐ.ஆர். நடிகை மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், கௌதம் மேனன் மற்றும் ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். சுஜாதா எண்டர்டெயின்மென்ட் சார்பாக ஆனந்த் ஜாய் தயாரித்துள்ளார். 


பிப்ரவரி 11-ம் தேதி படத்தைத் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் திரையரங்குகளில் மக்கள் எப்ஐஆர் படத்திற்கு அமோக ஆதரவு கொடுத்து வருகின்றனர். மூன்றாண்டுகளுக்குப் பிறகு விஷ்ணு விஷாளுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. அதை உற்சாகத்துடன் அனுபவித்து வருகிறார்.  திரையரங்குகளுக்கு நேராக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.


எப்.ஐ.ஆர் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படக்குழுவினர் வெற்றி விழா சென்னையில்  கொண்டாடினர். அதில் மனு ஆனந்த், விஷ்ணு விஷால், நடிகை ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு நடுவில் இந்த படம் வெளியிடப்பட்டு வெற்றி விழா வரைக்கும் வந்தது பட குழுவினர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. 


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.