காஷ்மீர் பெண்ணின் உடலில் துடிக்கும் தமிழனின் இதயம்!
சிகிச்சைக்காக 3000 கி.மீ தூரம் பயணித்து சென்னை வந்த, கடைசி நிலை இதய செயலிழப்பு காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகரைச் சேர்ந்த 33 வயதான இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட இதயம் 350 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு சென்னை கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக இதய மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
ஶ்ரீநகரைச் சேர்ந்த ஷாஸாதி ஃபாத்திமா என்ற பெண்ணுக்கு இதய அறைகளின் சுவர் தடிமனாக மாறுவதால் இதயம் இறுக்கம் அடையும் ரெஸ்ட்டிரிக்டிவ் கார்டியோமயோபதி (Restrictive cardiomyopathy) என்ற பிரச்னை காரணமாகத் தீவிர இதய செயலிழப்பு பிரச்னை மோசமாகிக் கொண்டிருந்தது. அவரது நிலை மோசமாகிக் கொண்டிருந்ததால் உயிரைக் காப்பாற்ற மிக விரைவாக இதய மாற்று அறுவைசிகிச்சை செய்வதுதான் தீர்வாக இருந்தது. அவரது உடல் நிலை மோசமடையவே கடந்த 2021 டிசம்பர் 31ம் தேதி அவர் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்ட்ரோப்ஸ் மற்றும் இதர
மருத்துகளை அளித்து எம்ஜிஎம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். கடந்த 2022 ஜனவரி 26ம் தேதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் நோயாளி ஒருவர் மூளைச்சாவு அடைந்ததாகவும் அவரது உடல் உறுப்புக்களை உறவினர்கள் தானமாக வழங்க முன் வந்துள்ளதாகவும் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கிரீன் காரிடார் உருவாக்கப்பட்டுத் தானமாகப் பெறப்பட்ட இதயம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேருக்கு மிக விரைவாக கொண்டு வரப்பட்டு அதிக ஆபத்து கொண்ட இதய மாற்று அறுவைசிகிச்சை ஷாஸாதி ஃபாத்திமாவுக்கு நிகழ்த்தப்பட்டது. ஆச்சரியப்படத் தக்க வகையில் அவர் உடல் நலம் தேறி, காஷ்மீரில் தன்னுடைய புதிய வாழ்வைத் தொடங்க தயார் ஆனார்.
காஷ்மீரைச் சேர்ந்த திருமணம் ஆகாத இளம் பெண்தான் ஷாஸாதி ஃபாத்திமா. தன்னுடைய சகோதரருடன் கூலி வேலை செய்து வந்த அவரால் இதய நோய்க்கு உரிய மருத்துவ சிகிச்சை பெற, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையிலிருந்தார். இந்த பெண்ணின் அவல நிலையைக் கண்டு ஐஷ்வர்யா அறக்கட்டளை அவருக்கு உதவி செய்ய, எம்ஜிஎம் ஹெல்த்கேரில் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ள முழு உதவி வழங்குவது என்று முடிவெடுத்தது.
இது குறித்து ஐஷ்வர்யா அறக்கட்டளையின் நிறுவனர் சித்ரா விஸ்வநாதன் அவர்கள் கூறுகையில்:
”ஜனவரி 26, 2022 அன்று இதய மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவருக்கு நிதி உதவி செய்ததின் மூலம் குடியரசு தினத்தை ஒரு அர்த்தம் மிக்க வழியில் ஐஷ்வர்யா அறக்கட்டளையானது கொண்டாடியது” என்றார். எம்ஜிஎம் ஹெல்த்கேர் தன்னுடைய பங்குக்கு உதவியாக மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த அறுவைசிகிச்சையை செய்தது.
இது குறித்து, எம்ஜிஎம் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹார்ட் அன்ட் லங்டிரான்ஸ்பிளாண்ட் & மெக்கானிக்கல் சர்க்குலேட்டரி சப்போர்ட் இயக்குநர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில் தங்களுக்கு மிகப் பெரிய இழப்பு
ஏற்பட்ட சூழலிலும் உடல் உறுப்புக்களைத் தானமாக வழங்க முன் வந்த அந்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் உடல் உறுப்பு மாற்று ஆணையம் (Transtan) தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செயல்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் கண்காணித்து வழிநடத்துகிறது என்றார்.
எம்ஜிஎம் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹார்ட் அன்ட் லங் டிரான்ஸ்பிளாண்ட் & மெக்கானிக்கல் சர்க்குலேட்டரி சப்போர்ட் இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் ராவ் அவர்கள் கூறுகையில்:
உயிரைக் காப்பாற்றும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்ய ஒருங்கிணைப்பு மற்றும் பல நபர்களின் ஒத்துழைப்பு தேவை. உண்மையில் இது மிகச் சிறந்த குழு முயற்சியாகும் என்றார்.
எம்ஜிஎம் ஹெல்த்கேரின் இதயவியல் மற்றும் இதய செயலிழப்பு திட்டத் தலைவரும் மூத்த மருத்துவருமான டாக்டர் ஆர்.ரவிக்குமார் அவர்கள் கூறுகையில்:
இதய செயலிழப்பு என்பது இந்தியாவில் மிகப பெரிய அளவில் கவனிக்கப்படாத பிரச்னையாக உள்ளது. வழக்கமான சிகிச்சைகள் பயன்படாத நிலையில் இதய செயலிழப்பால் அவதியுறும் நோயாளிகளின் தரமான வாழ்க்கை முறை மற்றும் ஆயுளை அதிநவீன சிகிச்சைகளான இதய மாற்று அறுவைசிகிச்சை மற்றும் இடது வென்ட்ரிக்குலார் அசிஸ்ட் கருவி (LVAD) மூலம் மேம்படுத்தலாம் என்றார்.
எம்.ஜி.எம் ஹெல்த்கேர் பற்றிய சிறுகுறிப்பு:
மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை, மிகச்சிறந்த சிகிச்சை அனுபவத்தை நோயாளிகள் பெறவும், நிபுணர்களின் நிபுணத்துவம் வெளிப்படவும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதிலும் ஆர்வம் கொண்டதாக உள்ளது. உச்சக்கட்ட மருத்துவ பாதுகாப்பை வழங்கும் வகையில் அதிநவீன மருத்துவமனை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.
400 படுக்கைகள், 50 புறநோயாளிகள் ஆலோசனை அறைகள், 100க்கும் மேற்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், 250க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 12 அதிசிறப்பு மையங்கள், 30க்கும் மேற்பட்ட மருத்துவத் துறைகள், 12 அதிநவீன அறுவைசிகிச்சை கூடம், 24 மணி நேரமும் வாரத்துக்கு ஏழு நாளும் விரிவான அவசர சிகிச்சை இங்கு உள்ளது. இங்கே, புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் கவனிப்பு இதனுடன் அதிநவீன தொழில்நுட்பம் இணைந்து நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சை வழங்கப்படுகிறது.
எம்.ஜி.எம் ஹெல்த்கேர் உச்சபட்சமான ஆசியாவின் யு.எஸ்.ஜி.பி.சி லீட் பிளாட்டினம் சான்றளிக்கப்பட்ட முதல் பசுமை மருத்துவமனையாகும். கடந்த ஆண்டுகளில், எம்.ஜி.எம் ஹெல்த்கேரின் நம்பிக்கை மற்றும் மருத்துவ சிறப்பை நிறுவுவதற்கான முயற்சியில் பல புதுமையான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை மருத்துவ நிபுணர்களின் குழு செய்துள்ளது. எம்.ஜி.எம் ஹெல்த்கேர் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் அதிநவீன கருவிகள் மற்றும் சிறந்த மருத்துவர்களைக் கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
VIDEO HERE:
கருத்துரையிடுக