'அஷ்டகர்மா' திரைப்பட விமர்சனம்
நடிப்பு: சி.எஸ். கிஷன், நந்தினி ராய், ஷ்ரதா,
தயாரிப்பு: சி.எஸ்.பதம் சந்த், சி.அரிஹந்த் ராஜ், சி.எஸ்.கிஷன்
இசை: எல்.வி.முத்துகணேஷ்
ஒளிப்பதிவு: ஆர்.பி.குருதேவ்
இயக்கம்: விஜய் தமிழ் செல்வன்
மனநல மருத்துவர் கிஷனுக்கு பேய், பிசாசு போன்றவற்றின் மீது நம்பிக்கை கிடையாது. பேய் இருக்கிறதா இல்லையா என்று டிவியில் நடக்கும் விவாத மேடையில் கிஷன் பங்குகொள் கிறார். அங்கு பேய் என்று ஒன்று கிடையாது என வாதாடுகிறார். அதே விவாதத்தில் கலந்துகொண்டிருக்கும் மந்திரவாதி ஒருவர், தான் சொல்லும் வீட்டில் ஒருநாள் தங்கி இருந்தால் பேய் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கி றேன் உங்களால் தங்க முடியுமா என்று சவால் விடுகிறார். சவாலை ஏற்கும் கிஷன் அந்த வீட்டில் தங்குவதற்காக உரிமையாளரிடம் அனுமதி கேட்டுச் செல்கிறார். ஏற்கனவே அங்கு நடந்த பேய் அட்டகாசத்தால் வீடு மாறி வந்திருந்த குடும்பத்தினர் கிஷனை அந்த வீட்டில் தங்க அனுமதி மறுக்கின்றனர்.
குறிப்பிட்ட வீட்டில் செய்வினை செய்து வைக்கப்பட்டிருப்பதால் துர்சம்பவங்கள் நடப்பதாக டாக்டர் கிஷனிடம் மந்திரவாதி கூறுகிறார். இந்த விஷயத்தை மீண்டும் அந்த குடும்பத்தாரிடம் சொல்லி செய்வினை யை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார் கிஷன். இதன் முடிவு என்னவாகிறது என்பதை திடுக்கிடும் சம்பவத்துடன் விளக்குகிறது கிளைமாக்ஸ்.
குறிப்பிட்ட செய்வினையை எடுக்க முடியாது அதை வைத்தவர்கள் மீது வேண்டுமானால் திருப்பி விடலாம் என்று மந்திரவாதி கூறியதும் செய்வினையை செய்துவைத்தது யார் என்ற தேடல் காட்சிகள் ஆர்வத்தை தூண்டுகிறது.
செய்வினை செய்தவர்கள் யார் என்ற சஸ்பென்ஸ் உடையும்போது, ”அட இவர்களா அப்படி செய்தது?” என்று ஆச்சர்யமும் அதிர்ச்சியும் மேலிடுகிறது.
படத்தில் இயக்குனர் டி.ராஜேந்தர் பாடிய ஓடிய ஒரு பாடல் கிளை மாக்ஸுக்கு பிறகு ஒலிக்கிறது. அதற்கான காட்சியில் கிஷன் கவர்ச்சி பெண்களுடன் ஆடி பாடி கவர்கிறார்.
மிஷ்ரி என்டர்பிரைசஸ் சார்பில் சி.எஸ்..பதம்சந்த், சி.அரிஹந்த் ராஜ் சி.எஸ்.கிஷன் இணைந்து தயாரித்திருக் கின்றனர்.
விஜய் தமிழ்செல்வன் ஹாரர் படமாக உருவாக்கி திகில் பரவவிட்டிருக்கிறார். செய்வினை செய்வதும் அதனால் பாதிப்பு ஏற்படும் என்பதை வலியுறுத்தி சொல்லியிருப்பது சிலரின் தூக்கத்தை கெடுக்கும்.
கருத்துரையிடுக