உரத்தசிந்தனையின் ஏழாவது ஆண்டு பாரதி உலாவின் நிறைவு விழா!

உரத்தசிந்தனையின் ஏழாவது ஆண்டு பாரதி உலாவின் நிறைவு  விழா!


உரத்தசிந்தனையின் ஏழாவது ஆண்டு பாரதி உலாவின் நிறைவு  விழா சென்னை  தியாகராயநகர் வாணிமஹால் சிற்றரங்கில்  முனைவர் கீதாஸ்ரீயின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று துவங்கியது.

சென்னையில் உள்ள  சோகா இகெதா கலை அறிவியல் கல்லூரி மாணவி செல்வி. பெர்னத் மோரிஸ், "ஆசை முகம் மறந்து போச்சே"  என்ற பாரதி பாடலையும் சென்னையில் உள்ள பிரின்ஸ் வெங்கடேஷ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி செல்வி.மோ.கோபிகா "சின்னஞ்சிறு கிளியே " என்ற பாரதி பாடலையும் அருமையாக பாடினர்.

பாரதி சிந்தனை- பேச்சரங்கில் சேவாலயா மகாகவி பாரதி மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.R.விலாசினி, "சாதிகள் இல்லையடி பாப்பா" என்ற தலைப்பிலும்,  தஞ்சாவூர் லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.

V.P.அக் ஷதா, "ரௌத்திரம் பழகு" என்ற தலைப்பிலும், உத்தமபாளையம் ஸ்ரீ விகாசா வித்யாலயா பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவி, செல்வி. E.அஸ்வினி "கொடுமையை எதிர்த்துநில்" என்ற தலைப்பிலும், சென்னை A.M.ஜெயின் கல்லூரி மாணவர் செல்வன்.க.முத்துசங்கர், " விதையினைத் தெரிந்தெடு" என்ற தலைப்பிலும்

திறம்பட தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். டெக்னோ ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்  திரு.முரளி ஸ்ரீநிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

உரத்தசிந்தனை சங்கத்தின் தலைவர் திருமதி.பத்மினி பட்டாபிராமன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களின் சிறப்பினைக் கூறி அறிமுகவுரை ஆற்றினார். உரத்தசிந்தனை சங்கத்தின் துணைத்தலைவர் ஆடிட்டர் திரு.என்.ஆர்.கே அவர்கள்  தொடக்கவுரை நிகழ்த்தினார். சாவித்ரி பவுண்டேஷன் நௌறுவனர் கலைமாமணி ஆடிட்டர் முனைவர். திரு.ஜெ.பாலசுப்பிரமணியன் தலைமையுரை வழங்கினார்.


திரைப்பட நடிகர் திரு.டில்லி கணேஷ்: 

MEN & MATTER, மற்றும் பாரதி உலா-2 சிறப்பிதழ் ஆகிய நூல்களை  வெளியிட்டு நகைச்சுவை ததும்ப பேசி மகிழ்வித்தார். சாய் சங்கரா மேட்ரிமோனியல் குழுமத்தின் நிறுவனர் முனைவர்.திரு. நா.பஞ்சாபகேசன்  நூல்களின் பிரதிகளைப் பெற்று சிறப்பித்தார்.

பாரதி உலா -2021 -ல் தனக்கேற்பட்ட அனுபவங்களை திரைப்பட இயக்குனர் திரு.ராசி அழகப்பன் பேசுகையில் அடுத்த தலைமுறைக்குத் தேவையானவற்றை அறிந்து உரத்தசிந்தனை செயல்படுகிறது என்றும், கொரானாவால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாரதி உலாவை சிறப்பாக நடத்தி இன்று நிறைவுவிழா  காண்கிறது என்றார். 

எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் பேசுகையில்:

"வேற்றுமையில் ஒற்றுமையை" மக்கள் உண்மையாக பின்பற்றவேண்டும் என்றும், வேறு எந்த அமைப்பில் இல்லாமல் உரத்தசிந்தனை அமைப்பில் தான் வாழ்நாள் உறுப்பினராய் இருப்பதில் பெருமை கொள்வதாகக் கூறினார். ஒவ்வொருவரும் தனது இறுதிநாள்வரை நாம் வாழும் சமுதாயத்திற்காக போராடவேண்டும் என்று அறிவுரை கூறினார். 

அனைவர் நெஞ்சிலும் நீங்கா இடம்பிடித்த ஒளிப்படக் கலைஞர் திரு.'போட்டோ' மணி அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி திரைப்பட இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன் தனது  நினைவுரையில் "மணியைப்போல் வாழ்ந்தால் எல்லோருடைய மனதிலும் இடம்பெறுவார்" என்று கூறி "உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் உளன்" என்பதற்கேற்ப வாழ்ந்து இன்றும் நம்மில் வாழ்ந்து வருகிறார் என்றார். 

திரைப்பட இயக்குனரும், எழுத்தாளருமான திரு.ஞான ராஜசேகரன், I.A.S.(ஓய்வு) அவர்கள் பாரதி உலா- 2021 ஒத்துழைப்பு நல்கிய புரவலர்களையும், செயல்வீரல்களையும் பாராட்டியதோடு, பாரதி உலாவைநேரிலும், இணையவழியிலும் வெற்றி உலா ஆக்கிய கல்லூரி,பள்ளி மற்றும் பிற அமைப்புகளையும் பாராட்டினார். தனது வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள் தான் வெளியிட்ட பாரதியார் படம் வெளிவந்த நாளாகும் என்றார். 


தமிழ் இலக்கியத்தில் செய்யுளை பாடலாக மாற்றியதால் எல்லோரும் அவர் பாடலைப் பாடமுடிகிறது என்றும், பற்பல முற்போக்கான சிந்தனைகளை பட்டியலிட்டு. 1922-க்கு முன்னரே  "பாரதசமுதாயம் வாழ்கவே" என்ற பாடலில் எடுத்துக்கூறியுள்ளார் என்றும், அதில் கூறப்பட்டதை பின்பற்றினால் நாட்டில் பற்பல முன்னேற்றம் ஏற்படும் என்று அருமையாக சிறப்புரை ஆற்றினார்.

உரத்தசிந்தனை செயலாளர் திரு.உதயம்ராம் நேர்த்தியாக ஒருங்கிணைத்து ஒவ்வொரு பேச்சாளரின் பெருமையை எடுத்துரைத்தார். திரு.கணேஷ் கிருஷ்ணன்  உற்பட பாரதி உலாவிற்க்காக உழைத்த அனைவரும் கெளரவிக்கப்பட்டனர். நிறைவாக உரத்தசிந்தனை சங்கத்தின் துணைச்செயலாளர் திரு.தொலைப்பேசி மீரான் நமது நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற திரைப்பட இயக்குனர் 

திரு.விசு, "போட்டோ மணி" ஆகியோரை  நினைவுகூர்ந்து நன்றியுரை ஆற்றினார். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி சிறப்பாக முடிவுற்றது.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.