‘விலங்கு’ வெப் சீரிஸ் விமர்சனம்
நடிகர்கள்: விமல், இனியா, பாலசரவணன், முனிஸ்காந்த், RNR மனோகர் மற்றும் பலர்.
இசை: அஜீஸ்
ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்
எடிட்டிங்: கணேஷ் சிவா
தயாரிப்பு: S. மதன்
இயக்கம்: பிரசாந்த் பாண்டிராஜ்
OTT: Zee5.
நடிகர் விமல் நடிப்பில் பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள வெப் சீரிஸ் 'விலங்கு'. இதில் இனியா, முனீஷ்காந்த் பால சரவணன், ஆர்.என்.ஆர் மனோகர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ZEE5 OTT தளத்தில் வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸ் மர்டர் மிஸ்ட்ரி கதைக்களமாக உருவாகியுள்ளது.
காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில், தலை துண்டிக்கப்பட்டு ஒரு பிணம் கண்டெடுக்கப்படுகிறது. அந்த கொலையைத் துப்பு துலக்க தொடங்கும் காவல்துறையினரின் பயணமே விலங்கு. கொலையாளியை கண்டுபிடித்தனரா?! எதற்காக கொலை நடைபெற்றது? போன்ற கேள்விகளுக்கான பதிலை விறுவிறுப்புடன் கச்சிதமாக சொல்லியுள்ளனர்.
'விலங்கு' தொடர் முழுக்க முழுக்க வேம்பூர் காவல் நிலையத்தில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. 7 அத்தியாயங்களைக் கொண்ட இந்த இணையத் தொடரின் 75 சதவீத காட்சிகள் காவல் நிலையத்திலேயே நடைபெறுகின்றன. அதற்காக அமைக்கப்பட்ட செட் மிகக் கச்சிதமாக கதையோடு பொருந்துவது கதைக்கு மேலும் வலு சேர்க்கிறது.
கருத்துரையிடுக