கட்ஸ் விமர்சனம்
இயக்குநர் ரங்கராஜ் இயக்கத்தில் இயக்குநர் ரங்கராஜ், நான்சி, டெல்லி கணேஷ், ஸ்ருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீ லேகா, அறந்தாங்கி நிஷா, பிரவீன் மஞ்சரேக்கர் மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் 'கட்ஸ்'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
ரங்கராஜ் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரது தந்தை மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். ரங்கராஜ் மனைவி ஸ்ருதி நாராயணன் கர்ப்பமாக இருக்கிறார். மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது ரவுடி கும்பலால் குத்தப்பட்டு அவரும் இறந்துவிடுகிறார்.
தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களிலும் ரங்கராஜ் நடித்துள்ளார். ரங்கராஜ் மணல் அள்ளும் பிரச்சனையில் கொல்லப்படும் ஒரு திரு நங்கையின் வழக்கை விசாரிக்கிறார். இந்த கொலைக்குப் பின் கார்பரேட் நிறுவனத்தின் முக்கிய புள்ளி ஒருவன் இருப்பது தெரிந்து அவனை கைது செய்து சிறையில் அடைக்கிறார். கைது செய்த சிறிது நேரத்தில் தனது அதிகாரத்தை வைத்து வில்லன் வெளியே வருகிறான். பிறகு தந்தை கொலை, மனைவி கொலை, வில்லன் கதை என படம் சூடுபிடிக்கிறது......
போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் கதாபாத்திரங்களிலும், விவசாயி பெத்தனசாமி கதாபாத்திரங்களிலும் ரங்கராஜ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்பா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ருதி நாராயணன், கிராமத்து பெண்மணியாக தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் மனோஜ் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார். பின்னணி இசை ஓகே. நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீலேகா, பெண் காவலராக நடித்திருக்கும் அரந்தாங்கி நிஷா தனக்கு கொடுத்த பணியை செய்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஆனால்
வசனத்திலும், பிளாஷ்பேக் காட்சிகளிலும் கூடுதல் கவனம் தேவை...
மொத்தத்தில் இந்த 'கட்ஸ்' பயம் கலந்த தைரியம்....
RATING 2.8/5
கருத்துரையிடுக