நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் சென்னையில் 14 புதிய நியூபெர்க் அட்வான்ஸ்டு!

நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் சென்னையில் 14 புதிய நியூபெர்க் அட்வான்ஸ்டு!



நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், இந்தியாவில் செயல்படும் 4  சங்கிலித்தொடர் முன்னணி ஆய்வகங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் இன்று 14 நியூபெர்க் மேம்பட்ட டயக்னாஸ்டிக்ஸ் &  உடல் பரிசோதனை மையங்களை சென்னையில் தொடங்கியுள்ளது. அத்துடன் இந்த நிதி ஆண்டிற்குள் 100 மையங்களைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.அனைவருக்கும் மிகக் குறைந்த கட்டணத்தில் பரிசோதனை மேற்கொள்ள வசதியாக இந்த நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ரத்தப் பரிசோதனை, எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், உடல் பரிசோதனை மற்றும் வீட்டிற்கு வந்து பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இப்புதிய மையங்கள் ஆய்வக வசதி மற்றும் உடல் பரிசோதனை மையங்களாகசெயல்படும். இது தவிர தமிழகத்தில் விரிவாக்க நடவடிக்கையாக நடப்பு நிதி ஆண்டில் (2022-23) ரூ. 200 கோடியை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

ஆய்வக பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் இந்த 14 மையங்களிலும் மேற்கொள்ளப்படும். இவை அண்ணா நகர், அசோக் நகர், அயனாவரம், ஹஸ்தினாபுரம், ஐயப்பன்தாங்கல், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், நங்கநல்லூர், பூந்தமல்லி, பெரவள்ளூர், ராமாபுரம், சாலிக்கிராமம், தாம்பரம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் நிலையில் உள்ள மக்கள் மற்றும் வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்கள் பரிசோதனை செய்துகொண்டால், கட்டணத்தில் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படும். வழக்கமான மாதிரி பரிசோதனைகள் வீட்டிற்கு ஒரு மணி நேரத்திற்குள் வந்து சேகரிக்கப்படும். பரிசோதனை முடிவுகளை 2 கி.மீ. சுற்று வட்டாரப் பகுதியில் எந்த ஒரு மையத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த 14 மையங்களின் செயல்பாடுகளை தமிழக மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். திறப்பு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே. சேகர்பாபு, மக்களவை உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் கலாநிதி வீராசாமி ஆகியோர் பங்கேற்றனர்.




விழாவில் மாண்புமிகு மா. சுப்ரமணியன்,  மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் பேசியதாவது:

மக்கள் ஆரோக்கியமாக வாழ்வது என்பது சமூக வளர்ச்சிக்கான அடையாளமாகும். இதை நன்கு உணர்ந்துதான் இதுபோன்ற தொழில்முனைவு சூழலை அங்கீகரித்து அவற்றை ஊக்குவிக்கிறோம். இதன் மூலம் பொதுமக்களின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் மிகச் சிறப்பான சேவையும் மக்களுக்குக் கிடைக்கும். சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் நியூபெர்க் உள்ளிட்ட நிறுவனங்கள் தரமான பரிசோதனை முடிவுகளை அளிப்பதோடு தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு மேம்படும். அத்துடன் உடல்நலன் பாதுகாப்பு மேம்படும் என்று கூறினார்.

விழாவில் பங்கேற்ற டாக்டர் ஜிஎஸ்கே வேலு, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் கூறியதாவது:

மாநில அரசின் சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த உறுதுணையாக இருப்பதே நிறுவனத்தின் நோக்கமாகும். இதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்குவதோடு இப்பிராந்தியத்தில் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வழியேற்படுத்துவதே குறிக்கோளாகும். இந்த இலக்குகளை எட்டுவதற்கு நோய் கண்டறியும் ஆய்வகங்கள் மற்றும் பரிசோதனை மையங்களை மாநிலம் முழுவதும் ஏற்படுத்துவது முக்கியமான பணியாகும். பல்வேறு தரப்பட்ட மக்களின் பலவிதமான உடல் ஆரோக்கிய பராமரிப்புத் தேவைக்கான பரிசோதனைகளை, நோய் கண்டறிவதை  தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அளிப்பதே நோக்கமாகும். நடப்பு நிதி ஆண்டில் கணிசமான முதலீடுகள் மூலம் தமிழக்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இந்த இலக்கை எட்டுவதற்கு, உரிய சிந்தனை உள்ளவர்கள் மற்றும் கூட்டு முதலீட்டு திட்டங்களை மேற்கொள்வோருடன் சேர்ந்து செயல்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வக பரிசோதனையாளர்கள், ரேடியாலஜிஸ்ட் மற்றும் கார்டியாலஜிஸ்ட் ஆகியோருடன் இணைந்து நோய் பரிசோதனை மையங்கள் மற்றும் உடல் பரிசோதனை மையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.



மேம்பட்ட பரிசோதனை முடிவுகளை மிகக் குறைந்த கட்டணத்தில் அளிப்பது மற்றும் நோய் தற்காப்பு முறைகளை அளிப்பது மற்றும் டிஜிட்டல் வசதியால் ஆன்லைன் மூலமாக எளிதாகவும் வசதியான முறையிலும் முடிவுகளை அளிப்பது சாத்தியமாகியுள்ளது. நோய் தற்காப்பு மற்றும் முன்னதாக நோய் பரிசோதனை மேற்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியுடன் நிறுவனம் கைகோர்த்துள்ளது.

தற்போது 150  ஆய்வகங்கள் மற்றும் 1,000-த்திற்கும் மேற்பட்ட மாதிரி சேகரிப்பு மையங்கள் செயல்படுகின்றன.  நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனம் இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் செயல்படுகிறது. நாட்டின் முன்னணி ஆய்வகங்களுடன் இணைந்தும் செயல்படுகிறது. பெங்களூரைச் சேர்ந்த ஆனந்த் டயக்னாஸ்டிக்ஸ் லேபாரட்டரி, அகமதாபாதில் உள்ள சுப்ராடெக் மைக்ரோபாத், புணேயைச் சேர்ந்த ஏ.ஜி. டயக்னாஸ்டிக்ஸ், சென்னையைச் சேர்ந்த எர்லிஷ் லேப், துபாயைச் சேர்ந்த மினர்வா லேப், தென்னாப்பிரிக்காவில் குளோபல் லேப் & மற்றும் பிற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறது. அமெரிக்காவில்  வடக்கு கரோலினாவில் செயல்படும். ஜெனோமிக்ஸ் லேபாரட்டரி நிறுவனத்துடன் இணைந்து மிகவும் வலுவான இடத்தை இந்நிறுவனம் பிடித்துள்ளது. இந்நிறுவனத்தில் 5 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 800 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.