நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட அனைவருக்கும் பாராட்டு!
மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில், தலைவர் நம்மவரின் விருப்பப்படி, கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சிக்காக, கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் அழைத்து பாராட்டப்பட்டனர்.
விழா கட்சியின் மாநில துணைத்தலைவர் திரு. A. G. மௌரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் மாநில செயலாளர்கள் முரளி அப்பாஸ், கிருபாகரன், வினோத், சஜீஸ், பிரகாஸினி, சினேகா மோகன் தாஸ் மற்றும் மாநகர மாவட்ட செயலாளர்கள், அமைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வேட்பாளர்களிடம் அவர்கள் போட்டியிட்ட பகுதியில் கிடைத்த அனுபவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. விழா முடிவில் வேட்பாளர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. தொடர்ந்து இதே போன்றுதமிழகத்தின் மற்ற பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் பாராட்டுவிழா மாநிலம் முழுவதும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கருத்துரையிடுக