‘சேத்துமான்’ அழகிய கலைப் படைப்பு

 ‘சேத்துமான்’ அழகிய கலைப் படைப்பு




பா.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் வரும் மே 27-ம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கும்  'சேத்துமான்'

இதுவரையிலும் ‘பரியேறும் பெருமாள்’, ‘குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரை வால்’, ‘சார்பட்டா பரம்பரை’, உள்ளிட்ட படங்கள் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. தற்போது 'சேத்துமான்' பற்றி பார்ப்போமா? 

பொட்டல் காட்டில், உச்சி வெயிலில் தன் தாத்தாவுடன் நடந்து செல்லும் குமரேசன், 'பள்ளிகூடத்துல டீச்சர் என்கிட்ட, நீ எல்லா கறியும் சாப்பிடுவியா?'னு கேட்டாங்க, அதுக்கு நான் 'எல்லாமே சாப்பிடுவேன்'னு சொன்னதும் சிரிச்சாங்க. 'ஏன் தாத்தா கறி சாப்பிட்றது தப்பா?' என கேட்கிறான். சமகால சாதிய, மத, அரசியலுடன் பிணைக்கப்பட்ட முக்கியமான கேள்வி இது. இந்தக் கேள்வியை மையமாக கொண்டு அழுத்தமான கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது 'சேத்துமான்'.

மேற்கு தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு நடக்கிறது கதை. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், நாமக்கல் அருகே உள்ள கிராமத்தில் ஊருக்கு வெளியே தனது பேரன் குமரேசன் (அஸ்வின்) உடன் வாழ்ந்து வருகிறார் பூச்சியப்பா (மாணிக்கம்). மாட்டுக்கறியை சாப்பிட்டதால் ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட தாய், தந்தையை இழுந்து தவிக்கும் குமரேசனுக்கு தாத்தா பூச்சியப்பாதான் எல்லாமுமே.


குமரசேனை எப்படியாவது படிக்க வைத்து, நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என ஓயாது உழைக்கிறார் பூச்சியப்பா. கூடைப் பின்னி சந்தையில் விற்று பணம் சம்பாதிக்கும் அவர், அந்த ஊரில் உள்ள பண்ணையாரான வெள்ளையனுக்கு (பிரசன்னா பாலசந்திரன்) உதவியாகவும் இருந்த வருகிறார். இதனிடையே வெள்ளையனும் அவரது குழுவும் இணைந்து சேத்துமான் கறி (பன்றிக்கறி) சாப்பிட ஆசைப்படுகின்றனர். இறுதியில் அவர்களின் விருப்பத்தால் ஏற்பட்ட விபரீதம் குறித்த அழுத்தமான காட்சிகளால் யதார்த்ததுக்கு நெருக்கமான படைப்பாக உருவாகியுள்ளது 'சேத்துமான்'.

பொட்டல் காட்டில் தாத்தாவும் பேரனும் நடந்து செல்லும்போது நமக்கு மூச்சு வாங்குகிறது. அதை நமக்கு கடத்துவதில் பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு முக்கிய பங்காற்றுகிறது. பல இடங்களில் வரும் லெந்த் ஷாட்டுகள், தொடக்கத்தில் வரும் வொயிட் ஆங்கிள் ஷாட், எதார்த்ததுக்கு நெருக்கமாக படத்தைக் கொண்டு செல்ல பெரிதும் உதவுகிறது. பிந்து மாலனியின் பிண்ணனி இசையும், பாடல்களும் வித்தியாசமான திரை அனுபவதிற்கு உதவுகின்றன.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'வறுகறி' சிறுகதைதான் 'சேத்துமான்' ஆக திரை ஆக்கம் பெற்றிருக்கிறது. தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாணிக்கம் வாழ்த்திருக்கிறார். துறுத்தல் இல்லாத நேர்த்தியான நடிப்பு. எந்த இடத்திலும் அவரது நடிப்பை பார்க்க முடியவில்லை, தனக்கு முன்னால் கேமரா இருக்கிறது என்பதை மறந்து அவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார். அதேபோல, பேரனாக வரும் அஸ்வின் குறும்புத்தனத்திலும், தாத்தாவுடனான பிரியத்தை காட்டுவதிலும், இறுதிக்காட்சியிலும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இருவரின் நடிப்பும் படத்துக்கு மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் ‘சேத்துமான்’ அழகிய கலைப் படைப்பு.

NEELAM PRODUCTIONS

SETHTHUMAAN 

SCREENPLAY, DIRECTION : THAMIZH

PRODUCER : PA. RANJITH

STORY, DIALOGUE: PERUMAL MURUGAN

CINEMATOGRAPHY: PRATHEEP KALIRAJA

MUSIC: BINDU MALINI 

EDITING: C.S. PREMKUMAR

SOUND DESIGN: ANTHONY BJ RUBAN 

STUNT : ”STUNNER” SAM

LYRICS: YUGABHARATHI, PERUMAL MURUGAN, MUTHUVEL 

ART: JAIKUMAR

CO DIRECTOR: SATHISH SOUNDAR

ASSOCIATE DIRECTOR: YESWANTH

PRODUCTION EXECUTIVE: SANJIV 

SOUND MIXING: PRAMOD THAMOS

CG: MADHAVAN 

DI: iGene

PUBLICITY DESIGN: DHAMO NAAGAPOOSHNAM 

PRO: GUNA

PRODUCTION COMPANY : NEELAM PRODUCTIONS

SETHTTHUMAAN 

ARTISTS:

1. MANICKAM (GRAND FATHER)

2. MASTER. ASHWIN (GRAND SON)

3. PRASANNA (PANNADI)

4. SURULI (VELLAIYAN BANGALI)

5. KUMAR (PIG MAN)

6. SAVITHIRI (VELLAIYAN WIFE)

7. ANNAMALAI (AASARI)

8. NAGETHRAN (TEACHER)

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.