'விஷமக்காரன்' திரைப்படத்தின் விமர்சனம்
நடிகர்கள்:
அக்னி - வி,
ஐகிரி - அனிக்கா விக்ரமன்,
தரங்கிணி - சைத்ரா ரெட்டி
தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு : J கல்யாண்
இசை : கவின்-ஆதித்யா
படத்தொகுப்பு : S.மணிக்குமரன்
இயக்கம் : V
தயாரிப்பு : ஹனி பிரேம் ஒர்க்ஸ்
மக்கள் தொடர்பு : KSK செல்வா
ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஷமக்காரன்’.
மேனிபுலேஷன் அதாவது “மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல்” என்பதை மையக்கருவாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் வாழ்க்கை பயிற்சியாளராக நடித்துள்ளார் நாயகன் வி.
விஷமக்காரன் என டைட்டிலுக்கு ஏற்ப ஹீரோ வி, விஷமம் செய்ய அது வில்லங் கத்தில் முடிகிறது. மற்றொருவரின் மனதை தன்வயப்படுத்தி அவர்களை தன் எண்ணத்துக்கு ஏற்ப செயல்பட வைக்கும் மனோத்துவ ரீதியிலான மாறுபட்ட கதையாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். இதில் இயக்குனரும் ஹீரோவும் வி என்ற ஒருவர்தான். படத்தின் தொடக்கத்திலேயே manupulate (கையாளுதல்) என்ற வார்த்தை அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. ஒருவரிடம் அவர்களுக்கு சாதகமாகவே பேசி அவர்கள் மனதை தன் வயப்படுத்தி நம் எண்ணத்துக்கு ஏற்ப அவர்களை எப்படி செயல்பட வைக்கலாம் என்று சொல்லப் படுகிறது.
அதையே செயல் முறை விளக்கமாக முழுபடமாக உருவாக்கி இருக்கிறார் வி. படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் மூன்றுதான். அதில் வி, அனிதா விக்ரமன், சைத்ரா ரெட்டி நடித்திருக்கின் றனர். இவர்களை சுற்றித்தான் முழுகதையும் நகர்கிறது. இரட்டை இசையமைப்பாளர்களின் இசையில் பாடலும், பின்னணி இசையும் இனிமை.
படத்தின் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்? நீங்களே பார்த்து ரசியுங்கள்....
மொத்தத்தில் இந்த ‘விஷமக்காரன்’ சுவாரசியம் நிறைந்த கலவை...
கருத்துரையிடுக