குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'துணிகரம்'

குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'துணிகரம்'





இப்படத்தை ஏ4 மீடியா ஒர்க்ஸ் சார்பில்  டாக்டர் வீரபாண்டியன் , டெய்ஸி வீரபாண்டியன் தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் பாலசுதன் எழுதி, இயக்கியிருக்கிறார்.

படத்தில்  நடிகா்கள் வினோத், பரணி, டென்னிஸ் ஆகியோர், நடிகைகள் செம்மலர் அன்னம், சரண்யா ரவிச்சந்திரன் காயத்ரி ராஜா மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள். மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் கோகுல் இசையமைத்திருக்கிறார். குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி ஒருநாள் இரவில் நடைபெறும் கதை இது.

பரணியும் செம்மலர் அன்னமும் நடுத்தர வர்க்கத்து கணவன் மனைவி.சொந்த வீடு வாங்கவேண்டும் என்கிற பேச்சில் இருவருக்குள்ளும் சண்டை வந்து கணவன் பரணி மனைவியை அடித்து விடுகிறார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் அடிபட்டு விடவே பதற்றத்துடன் ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்.போகிற வழியில் அந்த ஆம்புலன்ஸை துப்பாக்கிமுனையில் தடுத்து நிறுத்தி உள்ளே நுழைகிறார்கள் குழந்தைக் கடத்தல் கும்பல்.ஆம்புலன்ஸை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்கள் சொன்ன திசையில் போக வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். அவர்கள் வசம் கடத்தப்பட்ட  குழந்தையும் உள்ளது. 




உயிருக்குப் போராடும் மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனை போகும் வழியில் இப்படிக் கடத்தப்பட்டுள்ள குழந்தையை கண் எதிரே பார்த்து மனம் பதைக்கிறார் பரணி. அதே நேரம் தங்கள் 4 வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் மேனேஜர் ஆன குழந்தையின் தந்தை போலீசில் புகார் கொடுத்து போலீசும் அவரும் ஒரு காரில் பரபரப்புடன் தேடிப் பறக்கிறார்கள்.

கடத்தல்காரர்கள் குழந்தை கடத்தல் செயலை வெற்றிகரமாக முடித்தார்களா? உயிருக்குப் போராடும் மனைவியை மருத்துவமனையில் பரணி சேர்த்தாரா?  கடத்தல் கும்பலை போலீஸ் பிடித்ததா என்கிற கேள்விகளுக்குப் பதில் தான் இந்த துணிகரம் படம். இப்படத்தில் குழந்தை கடத்தல் வில்லனாக நடித்து இருக்கும் வினோத் லோகிதாசன் தோற்றம் நடிப்பு உடல்மொழி என அனைத்திலும் தனது வில்லத்தனத்தைக் காட்டி கைத்தட்டல் பெறுகிறார்.

நடுத்தர வர்க்கத்து கணவனாக நடித்திருக்கும் பரணியும் அவரது மனைவியாக நடித்திருக்கும் செம்மலர் அன்னமும்  தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்து குறை வைக்காமல் நடித்துள்ளனர். ஒரே இரவில் நடக்கும் கதையாக இது படமாக்கப்பட்டுள்ளது.

ஒரு குழந்தைக் கடத்தலுடன் தொடங்குகிற படம், பரபரப்பான எதிர்பார்ப்புகளை ஆரம்பத்தில் எழுப்புகிறது.சஸ்பென்ஸ் த்ரில்லராக ஒரு புதுவித அனுபவத்தை நோக்கி  அழைத்துச்செல்லும் என்று எதிர்பார்த்தால்  காட்சிகள் முடியும் போதும் மிகச் சாதாரணமான காட்சிகளாக முடிகின்றன. எனவே நாம் எதிர்பார்ப்பு கரைந்து ஏமாற்றமாக மாறிவிடுகிறது.

குற்றச்செயல்களை அடிப்படையாக வைத்துப் படமெடுக்கும்போது பரபரப்பு நமக்கு ஏற்படுவது இயல்புதான் .அப்படித்தான் இந்த படம் ஆரம்பித்த போதும் பரபரப்பாகத் தொடங்குகிறது. நமக்குள்  பதற்றம் தொற்றிக் கொள்கிறது ஆனால் போகப்போக புத்திசாலித்தனமான காட்சிகள் இல்லாததால் அனைத்தும் முடிவில் சாதாரணமாகி விடுகிறது. எனவே படம் முடியும் போது நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.குழந்தைக் கடத்தல் என்ற ஒன்றைத் துல்லியமாகக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் பாலசுதன்.ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் நேர்த்தியாக திரைக்கதை அமைத்து நகர்த்தியிருந்தால் படம் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்.

படத்தின் இசை கதைக்கேற்றபடி பயணம் செய்துள்ளது. ஒளிப்பதிவும் அப்படித்தான். 

மொத்தத்தில் துணிகரம் திருப்திகரத்தை எட்டவில்லை.



லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.