ஷாருக்கான் நடிக்கும் “ஜவான்”

ஷாருக்கான் நடிக்கும் “ஜவான்”




ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட், நிறுவன தயாரிப்பில் மெகா ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், உருவாகும் பிரமாண்டமான ஆக்‌சன் எண்டர்டெயினர் திரைப்படம் ஜவான்”.  திரைத்துறை கண்டிராத வகையில், உயர்தர ஆக்சன் காட்சிகளுடன், இந்திய சினிமாவின் பெரும் கலைஞர்கள் இணைந்து பணியாற்ற,  பிரமாண்ட பொருட்செலவில் அற்புதமான படைப்பாக இப்படம் உருவாகிறது.  

ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தென்னிந்தியாவில் வெற்றிகரமான பிளாக்பஸ்டர் படங்களை தந்த இயக்குனர் அட்லீ, தற்போது இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜவான்மூலம்  மீண்டும் தனது மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தவுள்ளார். ரசிகர்களின்  அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து,ஷாருக்கான் ஒரு முரட்டுத்தனமான பின்னணியில், காயம் மற்றும் கட்டுகளால் மூடப்பட்டிருக்கும் டீசர் வீடியோ இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், திரைப்படத்தின் தன்மையை படத்தின் தொனியை ரசிகர்களுக்கு சொல்வதாக அமைந்துள்ளது, இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது. 

 படம் குறித்து ஷாருக்கான் கூறுகையில்:

ஜவான்திரைப்படம்  மொழி, நிலப்பரப்பு தாண்டி அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு உலகளாவிய கதை. இந்த தனித்துவமான திரைப்படத்தை உருவாக்குவதற்கான பெருமை அட்லீயை தான் சேரும், ஆக்‌சன் படங்களை விரும்பும் எனக்கு இந்த படம் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது! எங்கள் திரைப்படத்தின்  ஒரு முன்னோட்டமாக இந்த  டீசர் இருக்கும். இந்த டீசர் திரைப்படம் பற்றிய ஒரு பார்வையை  ரசிகர்களுக்கு அளிக்கும். 

ஜவான் படத்தை உருவாக்குவது குறித்து இயக்குநர் அட்லீ பேசுகையில்:

ஜவான்உணர்வுப்பூர்வமான டிராமா, ஆக்‌சன் என எல்லாம் கலந்த திரைப்படமாக இருக்கும். பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க விரும்புகிறேன், அவர்கள் அனைவரும் ஒன்றாக ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படத்தையும், முன் எப்போதும் இல்லாத வகையில் ஷாருக்கானை சிறப்பாகவும் காட்ட முயற்சித்துள்ளேன். என்றார். 

ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ஜவான்திரைப்படத்தை ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, கௌரி கான் தயாரிக்கிறார். ஜவான்திரைப்படம் ஜூன் 2, 2023 அன்று ஐந்து மொழிகளில் ஷாருக்கானின் முதல் பான் இந்திய படமாக வெளியிடப்படுகிறது. ஜவான் திரைப்பட அறிவிப்பையடுத்து, அடுத்த ஆண்டில் ஷாருக்கான் மேலும் டங்கி, பதான் ஆகிய படங்களின் மூலம் பார்வையாளர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் விருந்தளிக்க உள்ளார். 



 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.