'ஓ2' திரைவிமர்சனத்தை பார்ப்போமா?
நுரையீரல் பாதிப்பால் ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவியின்றி சுவாசிக்க முடியாமல் தவிக்கும் தன் மகனை அழைத்துக்கொண்டு மேல்சிகிச்சைக்காக கொச்சின் செல்லும் தாய் (நயன்தாரா). தன் காதலியின் தந்தைக்கு தெரியாமல் அவளை அழைத்துச்செல்ல திட்டமிடும் காதலன், போதைப்பொருளை கடத்திச் செல்லும் காவலர், இழந்த செல்வாக்கை மீட்கச் செல்லும் ஒரு அரசியல்வாதி உட்பட பலரையும் ஏற்றிக்கொண்டு, கோவையிலிருந்து கேரளா புறப்படுகிறது அந்த ஆம்னி பேருந்து.
வழியில் ஏற்படும் விபத்து காரணமாக பாலக்காடு செல்பவர்களுக்கு மட்டும் மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் இறங்கிக்கொள்கிறார்கள். மீதியுள்ள 8 பேருடன் கொச்சின் செல்லும் அந்தப் பேருந்து நிலச்சரிவில் சிக்கிக்கொள்ள, அந்த பேருந்துக்குள் ஆக்ஸிஜனுக்காக போராடும் அவர்களின் நிலை என்னவானது? எப்படி மீண்டார்கள் என்பதுதான் ‘ஓ2’ படத்தின் திரைக்கதை.
ஒட்டுமொத்த படத்திற்கும் அச்சாணியாக சுழல்கிறார் நயன்தாரா. மகனுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் துணிவு, சமயோஜித யோசனை, குற்ற உணர்ச்சி, பாசம்,பயம், பதற்றம் என அத்தனை உணர்ச்சிகளையும் கச்சிதமாக கடத்தும் விதத்தில் ஈர்க்கிறார். எந்த இடத்திலும் நயன்தாராவிடம் மிகை நடிப்பை காணமுடியாதது படத்திற்கு பலம் சேர்க்கிறது. யதார்தத்துக்கு நெருக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அடுத்தாக வீரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'யூடியூப்' புகழ் ரித்விக்கிற்கு இது முதல் படம். அவர் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதன் ஒரு தொடக்கப்புள்ளியான இந்தப் படத்தில் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் பரத் நீலகண்டன் வில்லனாக மிரட்டியிருக்கிறார். 'ஆடுகளம்' முருகதாஸ், ஆர்என்ஆர் மனோகர், ஷாரா, ஜாஃபர் இடுக்கி, சிபி புவன சந்திரன் உள்ளிட்டோரின் நடிப்பு படத்துக்கு பலம்.
அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். அடிப்படையில் ஒரு நல்ல திரைக்கதை என்பது, திரைக்கும் பார்வையாளனுக்குமான இடைவெளியை குறைப்பதுதான்.
மொத்தத்தில் 'ஓ2' கனமான கருத்தை விதைத்திருக்கிறது.....
கருத்துரையிடுக