“கண்ட நாள் முதல்’ எனும் புத்தம் புதிய நெடுந்தொடர்!

கண்ட நாள் முதல் எனும் புத்தம் புதிய நெடுந்தொடர்!தமிழகத்தின் அர்த்தமுள்ள பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் இருவேறு துருவங்களாக இருக்கும் இருவர் எதிர்பாராத சூழ்நிலைகளால் ஒன்று சேரும் கதையை மையமாகக் கொண்ட ‘கண்ட நாள் முதல்’ என்னும் புத்தம் புதிய நெடுந்தொடரை ஒளிபரப்ப உள்ளது.


ஜூன் 13 முதல் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இத்தொடர் நந்தினி (நடிகை தர்ஷனாவாழ்வில் குறுக்கிடும் குமரனின் (நடிகர் நவின்வாழ்க்கையை பற்றி விவரிக்கிறதுவிதியின் கொடூரமான திருப்பத்தால்ஒருவருக்கு ஒருவர் மனக்கசப்புகள்இருந்தாலும் குமரன் நந்தினியை திருமணம் செய்து கொள்கிறான்இந்த நிலையில் குமரனுக்கும் நந்தினிக்கும் இடையே காதல் மலர்கிறதா அல்லது அவர்கள் ஒருவரையொருவர் இகழ்வது தொடர்கிறதா என்பதைப் பார்க்க ஜூன் 13, திங்கட்கிழமை அன்று இரவு 8.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசியுங்கள்.

 

இந்த புதிய சீரியல் குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வர்த்தகப் பிரிவு தலைவர் திரு ராஜாராமன் கூறுகையில், “புதுமையான கதை அம்சங்கள் மற்றும் அழுத்தமான கருப்பொருளை மையமாகக் கொண்ட சீரியல்களை வெளியிட்டு வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அதன் தொடர்ச்சியாக தற்போது ‘கண்ட நாள் முதல்’ என்னும் சீரியலை ஒளிபரப்புவது குறித்து மகிழ்ச்சி அடைகிறதுஇந்த நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சிகளைப் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக உள்ளதுவெவ்வேறு சித்தாந்தங்கள் மற்றும் ஆசைகளைக் கொண்ட இரு நபர்களின் அசாதாரணமான காதல் கதையை பார்வையாளர்கள் நிச்சயம் கண்டு ரசிப்பார்கள்இந்த நிகழ்ச்சியை எங்களின் முக்கிய நிகழ்ச்சிகளின் வரிசையில் சேர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்மேலும் இது எங்களின் பிரைம்-டைம் நிகழ்ச்சியில் சிறப்பிடம் பிடிக்கும்பார்வையாளர்களுக்கு இது ஒரு முழுமையான விருந்தாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

 

கண்ட நாள் முதல் சீரியல் குமரனின் வாழ்க்கையை விவரிக்கிறதுநேர்மையான கான்ஸ்டபிளாக இருக்கும் அவனது முழு வாழ்க்கையும் அவனது சகோதரி அர்ச்சனாவை (நடிகை ரஷ்மிதா ரோஜாசுற்றியே வருகிறதுடிபன் சென்டர் நடத்தி வரும் அர்ச்சனாதன் சகோதரன் இருக்கும் அதே குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள்விதியின் காரணமாகபணக்கார தொழில் அதிபரின் மகனான நகுலன் (நடிகர் அருண்), அவளைப் காலைப் பிடித்து கெஞ்சாத குறையாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறான்.

 

குமரனும் அந்த குடும்பத்தில் ஒருவராக வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அர்ச்சனா திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார்அதேசமயம்நகுலனின் சகோதரி நந்தினி ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார்வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறார்ஆனால் விதியின் காரணமாக குமரனும் நந்தினியும் திருணம் செய்து கொள்கிறார்கள்அவர்களிடம் எப்படி அன்பான உறவு மலர்கிறது என்பதே இதன் கதையாகும்.

 

இது குறித்து இத்தொடரின்  இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “கண்ட நாள் முதல் சீரியலை இயக்குவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்இது அவர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளின் தொகுப்பைக் கொண்ட குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களுடன் ஒரு விசித்திரமான கதைக்களத்தைக் கொண்டுள்ளதுஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்கள் கனவுகளை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள்அதே நேரத்தில் தங்கள் உறவுகளை எப்படி சமநிலைப்படுத்துகிறார்கள் என்பதே கதையின் முக்கிய அம்சம் ஆகும்கிராமப்புறங்களில் ஒரு அற்புதமான நடிகர் பட்டாளத்தை இயக்கியது என்பது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்ததுஇந்த சீரியலின் அனைத்து கதாபாத்திரங்களும் சமூகத்தின் ஒரு முக்கிய அம்சத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உள்ளதுஇதை இயக்க எனக்கு வாய்ப்பளித்த கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.

 

இது குறித்து நடிகர் நவின் கூறுகையில்இதயத்தை திருடாதே சீரியலைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக கலர்ஸ் தமிழ் உடன் இணைவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்நான் இந்த சீரியலை தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம் தனித்துவமான கதைக்களமும்கதாபாத்திரமும்தான்முதன்முறையாக நான் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்குமரன் என்ற கதாபாத்திரமாக மாற கடுமையாக உழைக்க வேண்டியது இருந்ததுநாங்கள் அனவரும் கடும் முயற்சி செய்து சிறப்பாக நடித்திருக்கிறோம்இந்த சீரியலை பார்வையாளர்கள் உண்மையிலேயே பாராட்டுவதோடு அதை வியக்க வைக்கும் வெற்றியாக மாற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.