புத்தம் புதிய தொடர் ‘மந்திரப் புன்னகை’ – ஆகஸ்ட் 1, 2022 முதல்.....
செஸ் விளையாட்டை திரைக்கு கொண்டு வந்து, விளையாட்டின் சிப்பாய் யார் என்று பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கும், அர்த்தமுள்ள பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, மந்திரப் புன்னகை என்னும் புத்தம் புதிய தொடரை ஒளிபரப்ப உள்ளது. இது ஆகஸ்ட் 1 திங்கட்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடர் முற்றிலும் காயத்ரி (நடிகை மெர்ஷீனா நீனு), கதிர் (ஹுசைன் அகமது கான்) மற்றும் குரு விக்ரம் (நியாஸ் கான்) ஆகிய மூன்று பேரைச் சுற்றியே வருகிறது.
இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மர்மமான சம்பவங்களை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதே இதன் கதையாகும். காதல், மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த இந்த தொடரை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை ஆகஸ்ட் 1 திங்கட்கிழமை இரவு 9.30 மணிக்கு டியூன் செய்யுங்கள் இந்த புத்தம்புதிய தொடரை பார்த்து மகிழுங்கள்.
இந்த தொடரின் நாயகி காயத்ரி, ஒரு அழகான மற்றும் புத்திசாலியான பெண் ஆவாள். அவள், காணாமல் போன தனது சகோதரியை (நடிகை நயனா ராஜ்) கண்டுபிடிக்கும் தேடலைத் தொடங்குகிறார். அதேசமயம், மாபியா மன்னன் குரு விக்ரமை சிறையில் அடைப்பதே தனது வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாக கொண்டு செயல்படும் காவல்துறை அதிகாரி கதிரையும் காதலிக்கிறாள். இந்த தொடர் காதல், சஸ்பென்ஸ் மற்றும் மர்மம் நிறைந்ததாக இருக்கும்.
புதிய தொடர் குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தக பிரிவு தலைவர் ராஜாராமன் கூறுகையில், புதிய கருத்துகளை முன்னிலைப்படுத்தும் எங்களின் நெறிமுறைகளை ஊக்குவிக்கும் விதமாக, எங்கள் தொலைக்காட்சியில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது புதிதாக மந்திர புன்னகை சேர்ந்து இருப்பது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தொலைக்காட்சி துறையில் முதல் முயற்சியாக இந்த தொடர் ஒளிபரப்பாகும் காலத்தை வரையறுத்துள்ளோம். மந்திர புன்னகை பன்முக அடையாளங்களுடன் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களைக் கொண்ட காதல், குற்றம் மற்றும் மர்மம் நிறைந்த ஒரு தொடராகும். இந்த தொடர் பார்வையாளர்களை நிச்சயம் கவர்ந்து இழுக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
இது குறித்து இந்த தொடரின் இயக்குனர் விக்கிரமாதித்தன் கூறுகையில், இதன் கதை ஒரு பெண்ணை சுற்றி வருகிறது. பாசாங்கு மற்றும் துரோகம் இழைக்கப்பட்டு காணாமல் போன தனது சகோதரியைக் கண்டுபிடிக்க அவள் எப்படி அனைத்து சவால்களையும் சமாளிக்கிறாள் என்பதே இதன் கதையாகும். இந்த தொடரின் கதாபாத்திரங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமானவை ஆகும், மேலும் அழுத்தமான கதை ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதி வரை பார்வையாளர்களை ஆர்வமாக இருக்கச் செய்யும். நாங்கள் இந்த தொடரை எடுக்கும்போது அவை எங்களுக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்கும்போது அதை நிச்சயம் அனுபவிப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார்.
நடிகை மெர்ஷீனா நீனு கூறுகையில், இந்த தொடரில் காயத்ரி என்ற புத்திசாலி மற்றும் வலிமையான பெண்ணாக நடிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் மன தைரியத்துடன் போராடும் பெண் எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்து இறுதியில் வெற்றி கொள்வாள். தன் சகோதரி மீது அவள் வைத்திருக்கும் பாசம் மற்றும் காதலன் மீது அவள் வைத்திருக்கும் அன்பு நிச்சயம் பார்வையாளர்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நான் நடிக்கும் முதல் தொடர் இதுவாகும் என்று தெரிவித்தார்.
இந்த புதிய தொடர் ஆகஸ்ட் 1 முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இந்த தொடரை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். நிகழ்ச்சியை பார்த்து மகிழுங்கள்.
கருத்துரையிடுக