Jothi Movie Review: 'ஜோதி' படம் எப்படி இருக்கிறது பார்ப்போமா?!

Jothi Movie Review: 'ஜோதி' படம் எப்படி இருக்கிறது பார்ப்போமா?! 



'ஜோதி' உண்மை சம்பவம்.... 

நான்கு நாளில் பிரசவம் ஆகவிருக்கும் டாக்டர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி ஜோதி (ஷீலா) ஜோதியின் வயிற்றை அறுத்து குழந்தையை திருடி செல்கிறான் மர்ம ஆசாமி… இதை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ( வெற்றி) கேள்விப் பட்டு அதிர்ச்சி அடைந்து. துருவி துருவி விசாரணை நடத்துகிறார். மர்ம ஆசாமியை நெருங்கியது போல் தோன்றினாலும் அவனை கண்டறிய முடியவில்லை. 

பலர் மீது சந்தேகப்பார்வை விழுந்தாலும் அவர்கள் குற்றவாளிகளாக உறுதி செய்யமுடிய வில்லை.ஒரு கட்டத்தில் குழந்தை கடத்தலுக்கு பின்னால் ஒரு கூட்டம் வியாபாரம் நடத்தும் விவகாரம் அம்பலமாகிறது. ஜோதியின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்தது யார்? அப்படி செய்ய சொன்னது யார்? திருடனை போலீஸ் பிடித்ததா? என்பது படத்தின் மீதி கதை.... 

போலீஸ் அதிகாரியாக வரும் சக்தி சிவபாலன், போலீசுக்குரிய மிடுக்குடனும், கம்பீரத்துடனும் வலம் வருகிறார். எந்நேரமும் வழக்கு பற்றிய சிந்தனையிலேயே இருப்பது போன்ற முகத் தோற்றம் பார்வையாளர்களை ஒருவித பரபரப்புக்குள் ஆழ்த்துகிறது. ஜோதி (எ) அருள்ஜோதியாக, நிறைமாத கர்ப்பிணியாக வரும் ஷீலா ராஜ்குமார் சிறப்பான, பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். துக்கத்திலும் தாய்மை உணர்வை துல்லியமாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். 

குழந்தைகளைக் கடத்தும் கயவனுக்கு பாடம் கற்பிக்க அவர் எடுக்கும் ரிஸ்க்கான முடிவு புல்லரிக்க வைக்கிறது. தலை வணங்கச் செய்கிறது. தயாரிப்பாளர் ராஜா சேதுபதி, மிக முக்கியமான ’ரங்கா’ என்ற கதாபாத்திரத்தில் தோன்றி, திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, கதை ஓட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்துகிறார். 

செஸி ஜெயாவின் ஒளிப்பதிவும் ஹர்ஷவர்தன் ராமேசுவரின் இசையும் ஜோதிக்கு பலம் சேர்க்கின்றன. யேசுதாஸ் குரலில் படத்தின் இறுதிக் காட்சியில் வரும் 'யார் செய்த பாவமோ.... என்ற பாடல் சரியான இடத்தில் போடப்பட்டிருந்தால் மேலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும். குற்றவாளி யார் என தொடங்கும் விசாரணையின் போது, படம் கூடுதல் வேகம் எடுக்க வேண்டிய இடங்களில் அழுத்தமில்லாத காட்சிகளால் வேகமும் குறைகிறது. 

மொத்தத்தில் இந்த 'ஜோதி' திருடனுக்கு சுடும்....




லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.