Dejavu Review: ‘தேஜாவு’ படத்தின் திரைவிமர்சனம்
அறிமுக இயக்குநர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘தேஜாவு’.
மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார்.
டிஜிபி ஆஷா-வின் மகளை ஒரு மர்மகும்பல் ஒன்று கடத்தி விடுகிறது. 4 பேர் இணைந்து ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். அதில் மூன்று பேர் காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்படுகின்றனர். ஒருவர் தப்பிக்க வைக்கப்படுகிறார். அன் அபிஷியல் போலீஸ் அதிகாரி என்ற பெயரில் களத்தில் இறங்குகிறார் விக்ரம் குமார்.
இந்த கடத்தலில் எழுத்தாளராக வரும் அச்யுத் குமாருக்கு தொடர்பு இருப்பது தெரியவர, அவரிடம் விசாரணை நடத்தியதில், இந்த வழக்கில் நடக்கும் சம்பவங்களையும், அடுத்து விசாரணையில் தொடரும் சம்பவங்களையும், அவர் முன்னமே கதையாக எழுதி வருவது தெரிகிறது. ஏன் அந்த கடத்தல் சம்பவம் அரங்கேற்றப்பட்டது? இந்தக்கதைக்கும் அந்த கடத்தல் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு? இறுதியாக ஆஷாவின் மகளை கண்டுபிடித்தாரா? கடத்தல் சம்பவத்திற்கு பின்னால் உள்ளவர்கள் யார் யார்? என்பதன் விறுவிறுப்பை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்....
தேஜாவு என்ற தலைப்புக்கான அர்த்தம் ஏற்கனவே நடந்தது என்பதே. இதை மையமாக வைத்தே இந்த படம் உருவாகியுள்ளது. எழுத்தாளராக நடித்துள்ள அச்யுத் குமார் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றுள்ளார். அவருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ள எம்.எஸ் பாஸ்கரின் குரல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காவல்துறை உயர் அதிகாரியாக வரும் மது பாலா தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். இறுதிவரை ஒரு விறைப்பான காவல்துறை அதிகாரியாக நடிக்க முயற்சி செய்துள்ளார்.
அருள்நிதியின் சினிமா பயணத்தில் 'தேஜாவு' திரைப்படம் நிச்சயம் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
எவ்வளவு க்ரைம் த்ரில்லர்கள் படம் வந்தாலும் ரசிகர்களை வியப்பில் ஆற்றும் படம் சில படங்களே... அந்த இடத்தில் தற்போது ‘தேஜாவு’ மாஸ் காட்டியுள்ளது என்றே கூறலாம்.
மொத்தத்தில் இந்த ‘தேஜாவு’ சிறந்த க்ரைம் புலனாய்வு.....
கருத்துரையிடுக