Nathi Movie Review: 'நதி' படத்தின் திரை விமர்சனம்!
விமர்சனம்
பேட்மிண்டன் போட்டியில் தேசிய அளவில் வெற்றிபெற்று, ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து குடும்பத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல போராடுபவர் தான் கதையின் நாயகன் தமிழ்.
இவர் எப்படியாவது ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாங்கிவிட வேண்டும் என்று அதற்கான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்… கதையின் நாயகி பாரதியும் தமிழும் கல்லூரி நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் காதலிக்கிறார்கள் என்று தவறாக புரிந்து கொள்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாரதியின் குடும்பத்தினர் தமிழை சம்மந்தமில்லாத ஒரு வழக்கில் மாட்டி விடுகின்றனர். நண்பர் பாரதி தமிழை அந்த வழக்கிலிருந்து வெளியே எடுக்க போராடுகிறார். அப்படி பாரதி போராடும் போது தான் தமிழ் மீது உள்ள காதலை பாரதி சொல்கிறார். பாரதியின் குடும்பத்தினர் தமிழை ஒதுக்க, தமிழ் இவர்களை விட கீழ் ஜாதியினர் என்பதும் ஒரு காரணம்....
படத்தில் 'மைக்செட்' ஸ்ரீராம், கொடங்கி வடிவேலு, ராம்நிஷாந்த் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளும், அதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்ட விதமும் வரவேற்க வேண்டியது. எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு பலம். ஒரு காட்சியில் நாயகன், 'ச்சீ இங்கையும் வந்துட்டீங்களா?' என கேட்கும் காட்சிக்கும், வசனத்திற்குமான நோக்கம் என்ன? என்பது தெரியவில்லை.... காதல் காட்சிகளில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் இந்த 'நதி' திணற வைப்பது நிச்சயம்.....
கருத்துரையிடுக