Nilaimarandhavan Movie Review: 'நிலை மறந்தவன்' திரைவிமர்சனம்

Nilaimarandhavan Movie Review: 'நிலை மறந்தவன்' திரைவிமர்சனம் 




மலையாளத்தில் சக்கைப் போடு போட்ட ’டிரான்ஸ்’ படத்தின்  தமிழ் வடிவமே  'நிலை மறந்தவன்’.

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் வழங்க, பகத் பாசில், நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன், திலீஷ் போத்தன், செம்பான் வினோத், வினாயகன் ஆகியோர்  நடித்திருக்கிறார்கள் .  

மனநிலை பாதிக்கப்பட்ட தம்பியோடு வளர்ந்த பகத் பாசில் , படித்த வேலை கிடைக்காத ,  தன்னம்பிக்கை வளர்க்கும் அளவுக்கு பேச்சுத் திறமை உள்ள ஓர் இந்து இளைஞன். 

எளிய அப்பாவி கிறிஸ்தவ மக்கள்,  கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை தவறாக  பயன்படுத்தி நோய்களைக் குணமாக்குவதாக பொய்யான கூட்டங்கள் நடத்தி மக்களிடம் இருந்து காசு பறிக்கும் கும்பலின்  வலையில் சிக்குகிறார்  பகத் பாசில்

பிறகு  கிறிஸ்தவ இளைஞனாக பெயர் மாற்றி நோய் தீர்ப்புக் கூட்டங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது போல  பேசக் கற்றுக் கொடுத்து பைபிளை நன்கு படிக்க வைத்து மேடை ஏற்றுகிறார்கள் .மேடையில் அவன் உணர்ச்சிவசமாக பேசுவதைக் கண்டு , பொய்களை நம்பும் கிறிஸ்தவ மக்கள்  பணத்தைக் கொட்டுகிறார்கள் . 

அதே நேரம் நோய்களுக்கு மருத்துவமனைக்கு போக வேண்டாம்..... என்று போலி போதகராக மாறிய பகத் பாசில் அலைபேசியில் சொல்ல இதன் விளைவாக ஒரு  மிகபெரிய இழப்பு ஏற்படுகிறது.  பிறகு  இந்த வேஷம் தவறு என்று நினைத்து ஹீரோ மாறினாரா?  இவரை உருவாக்கிய அந்த கும்பல் என்ன ஆனார்கள்? என்பது படத்தின் மீதி கதை....




நாயகனாக அட்டகாசமாக நடித்துள்ளார் பகத் பாசில் . கடைசிக் காட்சிகளில் செம்பான் வினோத் நெகிழ வைக்கிறார். நஸ்ரியா தனக்கு குடுத்த பணியை சிறப்பாக செய்து  இருக்கிறார்.   அமல நீரத் ஒளிப்பதிவும் ,  ஜாக்சன் விஜய் , சுஷின் ஷ்யாம் இசையும் அருமை.  கெளதம் மேனென் நடிப்பு படத்தின் பலம். விநாயகன் சிறந்த நடிப்பால் கவர்கிறார்.

தற்போது தமிழகத்தில் பெயர் பெற்ற கிறிஸ்துவ மத போதகர்கள் பெயர்கள் வரும் போது  ஒலி நீக்கப்பட்டுள்ளது. ஆனால் மோகன் சி மோசஸ் என்ற பெயர் ஒலி நீக்கம் செய்யாமல்  வருகிறது.  

இந்த படத்தை பார்க்கும் போது "திருடனா பார்த்து திருந்தாவிட்டால்...திருட்டை ஒழிக்க முடியாது...." என்ற பாடல் வரிகள் நினைவு படுத்துகிறது.

மொத்தத்தில் ’நிலை மறந்தவன்’ போலி மத போதகர்களுக்கு சாட்டை அடி.... 


   


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.