Iravin Nizhal Movie Review: 'இரவின் நிழல்' படம் எப்படி இருக்கிறது? பார்ப்போமா?!

Iravin Nizhal Movie Review: 'இரவின் நிழல்' படம் எப்படி இருக்கிறது? பார்ப்போமா?! 



ஒத்த செருப்பு  திரைப்படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் 'இரவின் நிழல்'.

நந்துவாக பார்த்திபன், ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு, பிரவீன் குமார், ஜோஷுவா இப்படி நிறையப் பேர் நடித்திருக்கிறார்கள். நந்துவின் மனங்கவர் நாயகிகளாக சிநேகா குமாரி, பிரிகிடா சகா, சாய் பிரியங்கா ரூத் என மூவர் நடித்திருக்கிறார்கள். 

நந்து என்கிற சினிமா ஃபைனான்சியர் பெரும் சிக்கலுக்கு உள்ளாகிறார். எல்லாம் முடிந்து மீதமிருக்கும் எதிரிகளை முடித்துத் தள்ள முடிவெடுக்கும் தருணத்தில் கடந்த கால வாழ்க்கையை எண்ணிப் பார்க்கத் தொடங்குகிறார். நந்துவின் வாழ்வில் நந்துவாக பலர் வந்துபோகிறார்கள். நந்து இந்தச் சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபராக, இந்தச் சமூகத்தைப் பாதித்த ஒரு நபராக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது என்பதைச் சொல்லிச் செல்கிறது 'இரவின் நிழல்'. 

தாயை இழந்து சாப்பாட்டிற்கு கூட இல்லாமல் கஷ்டப்படும் சிறுவனின் வாழ்க்கை தொடங்கி, சினிமா திரைப்படங்களுக்கு Finance செய்யும் அளவுக்கு உயரும் பார்த்திபனின் பயணம் எப்படி இருந்தது? அவன் மனநிலை என்ன? ஏன் அந்த முடிவை எடுக்கிறான்? என்பதை  படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.... 



இதில் சில பெண்கள் நந்துவை நல்வழிக்கும், சிலர் நந்துவைத் தீய வழிக்கும் கொண்டு செல்கிறார்கள். இவர்களோடு வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் என அனுபவ நடிகர்களும் வருகிறார்கள். தெலுங்குப் பேசும் நபராக வரும் பிரிகடாவுக்கு நல்லதொரு பாத்திரம். சிறப்பாக நடித்து கதையின் முக்கியப் புள்ளியாக மனதைக் கவர்கிறார்.

இந்த படத்தில் 94 நிமிடம் 36 நொடிகள் ஒரே ஷாட்டில் படமாக்கப்படுவதால் நடிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்துள்ளது.  'இரவின் நிழல்' படம் 94 நிமிடம் 36 நொடிகள் மட்டுமே என்பதால் இடைவேளை கிடையாது. இதன் காரணமாக, படம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை முதல் பாதியாக 20 நிமிடம்  உருவாக்கியுள்ளார் பார்த்திபன். அதில் இடம்பெறும் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றனர்.

பார்த்திபன் எடுத்த முயற்சிக்கும், அவரின் கனவிற்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உறுதுணையாக இருந்துள்ளார். அவரின் இசை 96 நிமிட படம் நகர்வதற்கு உதவியுள்ளது.

இன்னும் கதையில் சற்று கவனம் செலுத்தி, அதில் இருக்கும் பாதிப்பை காட்சிகளாக பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கலாம் என்று தோன்ற வைக்கிறது.... பெண்கள் தன் குழந்தைகளுடன் இந்த படத்தை பார்ப்பார்களா? என்பது சற்று யோசிக்க தான் வைக்கிறது.... 

மொத்தத்தில் இந்த 'இரவின் நிழல்' புதிய முயற்சி.....  


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.