ஈகோவாஸ் வர்த்தக ஆணையம் சென்னையில் துவக்கம்!

ஈகோவாஸ் வர்த்தக ஆணையம் சென்னையில் துவக்கம்!



 

சென்னை: 

கானா மற்றும் இந்தியா இடையே சுமுக வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாக சென்னையில் ஈகோவாஸ் வர்த்தக ஆணையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு கானா தூதுக்குழு தலைவர் ஜின்னா ரபிக் தலைமை தாங்கி உரையாற்றினார். மேலும் சென்னை வந்த கானா தூதரக அதிகாரியையும் அவர் வரவேற்றார்.

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள வணிக சமூகத்தினர் கலந்து கொள்ளும் வகையில் இந்தியா ஈகோவாஸ் வர்த்தக மாநாட்டை இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சில் சென்னையில் நடத்தியது. இதில் கானா நாட்டில் பல்வேறு வர்த்தக நிறுவனங்களை துவக்கவும் வர்த்தகங்களை மேற்கொள்ளவும் இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் மிகவும் ஆர்வம் காட்டினர். பார்மசூடிகல்ஸ், மருந்துகள், தகவல் தொழில்நுட்ப மேம்பாடு, ஜவுளி, ஆடைகள் மற்றும் தொழில்துறை மேம்பாடு ஆகியவற்றில் இருதரப்பு வர்த்தக வாய்ப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜின்னா ரபிக், மாநிலத்தின் புதிய சீர்திருத்தக் கொள்கை குறித்தும் வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான தமிழக முதல்வரின் உறுதிமொழி குறித்தும் அவர் பேசினார்.

கானாவில் மருந்து, ஆடைகள், ஜவுளி, வேளாண் செயலாக்கம் ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வருங்கால வணிகர்களை அழைத்துக் கொண்டு ஈகோவாஸ் தூதுக்குழு வரும் அக்டோபர் மாதம் கானா தலைநகர் அக்ராவுக்குச் செல்ல இருக்கிறது என்று துவக்க விழா நிகழ்ச்சியில் பேசிய ஜின்னா ரபிக் மேலும் கூறுகையில், குறிப்பாக இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் போது, உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தொழில் பூங்காக்களுக்கு நிதியுதவி செய்வதற்காக 500 கோடி ரூபாய்க்கு மேல் எக்சிம் வங்கி மூலம் இந்தியா கடந்த காலங்களில் கானாவிற்கு பல்வேறு கடன் உதவிகளை வழங்கி இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, ஜின்னா ரபீக்கிற்கு இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சில் - ஈகோவாஸ் வர்த்தக ஆணையத்தின் வர்த்தக ஆணையராக நியமனம் கடிதம் வழங்கப்பட்டது. பல வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுக்கு தமிழ்நாடு ஒரு மையமாக இருப்பதால், கானாவிற்கும் தமிழகம் ஒரு சிறந்த இடமாக இருக்கும். மேலும் கானாவுக்கான முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் கானாவை நமது தமிழகத்துடன் இணைக்க ஒரு உந்துசக்தியாக செயல்படுவோம் என்று கூறிய ஜின்னா ரபிக் விரைவில் வர்த்தக அலுவலகத்தை திறக்க இருப்பதாக கூறினார். 

கானாவில் உள்கட்டமைப்பு மற்றும் மின் திட்டங்களை அமைப்பதற்காக அந்நாட்டு அரசிற்கு இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான கடன் அனுமதியை அளித்துள்ளது. மேலும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியாவிடமிருந்து நீண்ட கால சலுகைக் கடன் பெறும் நாடுகளில் கானாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.