Thiruchitrambalam Movie Review: குடும்பங்கள் கொண்டாடும் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம்

Thiruchitrambalam Movie Review: குடும்பங்கள் கொண்டாடும் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம்



ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தின் கதை. உணவு டெலிவரி செய்யும் திருச்சிற்றம்பலம் என்கிற திருவை (தனுஷ்) பலம் என்று அழைக்கிறார்கள் அனைவரும். எந்த லட்சியமும் இல்லாமல் இருக்கும் அவர் வாழ்க்கை, அவர் பெயரையே கொண்ட தாத்தா சீனியர் திருச்சிற்றம்பலம் (பாரதிராஜா), தனக்குப் பிடிக்காத போலீஸ் அதிகாரி அப்பா நீலகண்டன் (பிரகாஷ்ராஜ்), பால்யத் தோழி ஷோபனா (நித்யா மேனன்) ஆகியோருடன் சென்று கொண்டிருக்கிறது, இயல்பாக. இதற்கிடையே அவருக்கு இரண்டு பெண்கள் மீது காதல் வருகிறது. அவை தோல்வியில் முடிய, அவர் அடுத்து என்ன செய்கிறார்?  அவருக்குப் பிடிக்காத அப்பா எப்படி பிடித்தவராகிறார்? நாயகனுக்குச் சிறுவயது முதலே தொடரும் பக்கத்து வீட்டுப் பெண்ணுடான நட்பு என்னவானது? என்பதை சிறப்பாக சொல்கிறது 'திருச்சிற்றம்பலம்'.

'பழம்' என்கிற திருச்சிற்றம்பலம் ஜூனியராக தனுஷ். தனுஷின் மிகப்பெரிய பலமே யதார்த்த நடிப்புதான்.ஷோபனாவாக, பழத்தின் தோழியாக அவர் செய்யும் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன. இயக்குநர் மித்ரன் ஜவஹரின் ஃபிரெஷ்சான யோசனைகளுக்காகவும் திறமையான நடிகர்களைச் சரியாகப் பயன்படுத்தி இருப்பதற்காகவும் வாழ்த்தலாம் அவரை.... தனுஷின் பயம் போக்க வைக்கப்பட்டிருக்கிற கிளைக்கதை கூட படத்துக்கு வலு சேர்ப்பது அழகு.

தாத்தாவையும் அவர் ஆலோசனையையும் கிண்டலடித்துக் கொண்டே தோழமையாக இருப்பது, தோழியுடன் ஜாலி.... கேலி...., கோபக்கார அப்பாவுடன் மோதல், நிராகரிக்கப்படும் காதல் ஏமாற்றத் தவிப்பு என, ஹீரோயிசம் இல்லாத அசல் பக்கத்துவீட்டு பையனை அப்படியே முன் நிறுத்துகிறார். 

அனிருத் இசையில், ’தாய்க்கிழவி’ ஆட்டம்போட வைக்கிறது. ’மேகம் கருக்காதா பெண்ணேபெண்ணே’ பாடலும் அதற்கான நடனமும் மனதை வருடுகிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கதையை அழகாக இழுத்துச் செல்கிறது.

மொத்தத்தில் இந்த  'திருச்சிற்றம்பலம்' பழத்தை சுவைக்கலாம்....  குடும்பங்களுக்கு விருந்து.....


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.