Methagu 2 Movie Review: 'மேதகு 2' திரைப்படத்தின் திரை விமர்சனம்

Methagu 2 Movie Review:  'மேதகு 2'  திரைப்படத்தின் திரை விமர்சனம் 



படம்: மேதகு 2

நடிப்பு: கவுரி சங்கர், நாசர் மற்றும் புதுமுகங்கள்

தயாரிப்பு நிர்வாகிகள்: தஞ்சை குகன் குமார், அயர்லாந்த் கவிஞர் திருக்குமரன்ப், டென்மார்க் சுமேஷ் குமார், தமிழன் சதீஸ், முனீஸ், பிரபாகரன் மற்றும் தங்க பிரபா

இசை: பிரவின்குமார்

ஒளிப்பதிவு:வினோத்
ராஜேந்திரன்

இயக்கம்: இரா.கோ யோகேந்திரன்

பி ஆர் ஒ: கே எஸ் கே செல்வா

'மேதகு 2' திரைப்படம் ஆகஸ்ட்-19ஆம் தேதி  வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான மேதகு படத்தின் தொடர்ச்சியாக இந்த 'மேதகு 2' படம் வெளியாகி உள்ளது.

சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கு சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது.


அதில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. குறிப்பாக தமிழர்களுக்கு துரோகம் இழைத்த ஒருவரை களை எடுப்பதாகவும் அவர்களை சிங்கள அரசு தேட ஆரம்பிக்க, அவர்கள் காட்டுக்குள் தலைமறைவு ஆவதாகவும் முதல் பாகம் முடிவடைந்தது.



இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 20 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்குவதையும் இந்த இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது. 


குறிப்பாக இடைவேளைக்கு பின் காட்சிகள் விறுவிறு வேகத்தில் நகர்கின்றன அதிலும் பிரபாகரன் மற்றும் அவரது குழுவை சேர்ந்த நால்வரை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் வலுக்கட்டாயமாக கையெழுத்து போட சொல்வதும் ஆனால் அவர்கள் அங்கிருந்து சாமார்த்தியமாக தப்பிப்பதுமாக, அந்த சமயத்தில் இருந்த மத்திய அரசு இரட்டை வேடம் போட்டு தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தையும் அழகாக காட்சிப்படுத்தி உள்ளனர்.


திரிக்கப்பட்ட ஈழ தமிழர் போராட்ட வாழ்வியலை இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு சரியான விதத்தில் கடத்தும் ஒரு ஊடகமாக நடிகர் நாசர் தனது பங்களிப்பை சிறப்பாக  செய்துள்ளார். 


வெப்சீரியஸ் போல் தொடர்ச்சியாக கதை முழுவதும் வந்திருந்தால் நன்றாகவும் தெளிவாகவும் மக்களுக்கு புரியும் என்று நினைக்க வைக்கிறது..... 


மூன்றாம் பாகம் வரும் என்ற அறிவிப்போடு இந்த 'மேதகு 2' திரைப்படம்  முடிகிறது.


மொத்தத்தில்  'மேதகு 2' வீர தமிழர்களின் உணர்வு....... 








லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.