Not Reachable Movie Review- 'நாட் ரிச்ச புள்' திரைவிமர்சனம்
இயக்குனர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில் விஷ்வா, சாய் தன்யா மற்றும் பலர் நடித்து வெளியாகிருக்கும் படம் தான் 'நாட் ரிச்ச புள்'
படத்தின் கதையை பார்ப்போம் வாங்க.....
மூன்று பெண்கள் காணாமல் போகிறார்கள், அதில் இரண்டு பேர் இறந்துவிடுகிறார்கள். அவர்கள் எப்படி இறந்தார்கள், இன்னொரு பெண்ணை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.
இந்த சம்பவம் பற்றி புலன் விசாரணை செய்யும் அதிகாரிகளாக வருகிறார்கள் ஹீரோ விஷ்வா மற்றும் ஹீரோயின் சாய் தன்யா. ஹீரோ மற்றும் ஹீரோயின் இடையே விவாகரத்து பற்றிய சொந்த விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் விசாரணையில் அந்த பெண்கள் பற்றி கண்டறியும் அதிர்ச்சி விஷயங்கள் தான் படத்தின் பரபரப்பான மீதி கதை......
எடுத்துக்கொண்ட கதைக்களம் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றியது. அதில் இயக்குனர் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். இருந்தாலும் யூகிக்க கூடிய அளவில் இருந்த திரைக்கதையை கொஞ்சம் கவனித்து இருக்கலாம். ஹீரோ விஷ்வா, ஹீரோயின் சாய் தன்யா குறை சொல்லாத அளவுக்கு நடித்து இருக்கிறார்கள். பெரிய ஸ்டார் காஸ்ட் இல்லாமல் புது முக நடிகர்களை மட்டும் வைத்து சிறப்பாகவே எடுத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் இந்த 'நாட் ரிச்ச புள்' சிந்திக்க வைக்கும் திரில்லர்.....
கருத்துரையிடுக