'காபி வித் காதல்' படத்தின் விமர்சனம்!

'காபி வித் காதல்' படத்தின் விமர்சனம்! நடிகர் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், டிடி, ரைசா வில்சன், அமிர்தா ஐயர் மற்றும் மேலும் பலரை வைத்து 'காபி வித் காதல்' என்ற படத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 

                   சரி விமர்சனத்தை பார்ப்போமா?! 

மூத்த அண்ணன் ஸ்ரீகாந்த் இசை கற்றுத்தரும் ஆசிரியர். வாலிபம் ஓய்ந்த திருமண வாழ்க்கையால் சலிப்படைந்து கிடக்கும் கணவர். அதிகம் பணம் ஈட்டும் வேலை, லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என பெருநகர வாழ்க்கையில் வெற்றிகொண்ட இளைஞனாக ஜீவா. எப்போதுமே ஜாலியாகச் சுற்றித்திரியும் கடைக்குட்டி ஜெய். இவர்களின் சகோதரியாக திவ்யதர்ஷினி கர்ப்பகாலத்தில் தாய்வீட்டில் இவர்களுடன் தங்கியிருக்கிறார். 

ஒரு ஆர்கானிக் உணவகம் வைக்கவேண்டும் என்பது ஜெய்யின் கனவு. அதற்கான இடத்தை கைப்பற்ற மாளவிகா சர்மாவைத் திருமணம் செய்ய முடிவுசெய்கிறார். ஆனால், அவர் காதலிப்பதோ தன் நீண்ட நாள் தோழியான அம்ரிதாவை. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஜீவா பிரேக்-அப் சோகத்தில் ஊர் திரும்புகிறார். அங்கே தம்பி ஜெய்க்கு நிச்சயக்கப்பட்ட மாளவிகா சர்மாவிடம் காதல் வயப்படுகிறார். 

ஆனால், அவருக்கு நிச்சயிக்கப்படும் பெண் ரைசா வில்சன். அவர் ஏற்கெனவே ஸ்ரீகாந்துடன் திருமணம் தாண்டிய உறவில் ஒன் நைட் ஸ்டாண்டில் இருந்தவர். அதனால் இந்தத் திருமணத்தை நடத்த விடக்கூடாது என முடிவுசெய்கிறார் ஸ்ரீகாந்த். இதில் யார், யார் கையைப் பிடிக்கிறார்கள்? ஜீவாவின் காதல் கைகூடியதா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை....

லிவ்-இன், ஒன்-நைட் ஸ்டாண்ட், திருமணத்திற்கு முன்னான கர்ப்பம் என இன்றைய நவீன காதலையும் காட்ட நினைத்ததெல்லாம் சரிதான். ஆனால், எந்த ஒரு புரிதலுமின்றி மேம்போக்காகவே அவை அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. யோகிபாவு மற்றும் கிங்ஸ்லி காமெடியை இன்னும் சில இடங்களில் பயன்படுத்தி இருக்கலாம். எந்த வித லாஜிக்கும் பார்காமால் ஜாலியாக நண்பர்களுடன் சென்று பார்க்கும் வகையில் 'காபி வித் காதல்' படம் உள்ளது.

மொத்தத்தில் இந்த 'காபி வித் காதல்' கிளாமர் கிக்......


cofee with kadhal movie

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.