'துணிவு' படத்தின் திரைவிமர்சனம்!

'துணிவு' படத்தின் திரைவிமர்சனம்! துணிவு படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. படத்தில் அஜித் வங்கியை திட்டமிட்டு கொள்ளையடிக்கும் நபராக வருகிறார். வங்கிகள் கிரெடிட் கார்டு, மியுச்சுவல் ஃபண்ட், பெர்சனல் லோன் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என படத்தில் விரிவாக பேசப்பட்டுள்ளது. குறிப்பாக தனியார் வங்கிகளின் கட்டணக் கொள்ளை குறித்து துணிவு திரைப்படம் விவரிக்கிறது. அஜித் வங்கியில் ஏன் கொள்ளையடிக்கிறார்? கொள்ளையடிக்கும் போது மாட்டிக் கொண்டாரா? இல்லையா?!  என்பதே துணிவு படத்தின் மீதி கதை.

சாதாரண ஒரு ஷாட்டில் அறிமுகமாகும் அஜித் குமார், அப்போதிருந்தே மொத்த படத்தையும் தன் கேப்டன் கூல் மோடில் ஜாலியாகத் தாங்கியிருக்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி, முதற்பாதியில் தன் கெத்தான மேனரிசத்தால் கவர்கிறார். மகாநதி சங்கர், பக்ஸ், ஜி.எம்.சுந்தர், பிரேம் குமார் என எல்லோரும் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். 

பால சரவணனை ஓவர் டேக் செய்து கைத்தட்டல்களை வாங்கும் மோகன சுந்தரம், சிரிப்புக்கு கேரன்ட்டி.  வில்லன் ஜான் கொக்கேன் நடிப்பு ஓகே. முதற்பாதியில், அஜித்துக்கும் காவல்துறைக்கும் இடையேயான காட்சிகளில் இருதரப்புக்கும் சம பலம் இருந்தது ஒரு சுவாரஸ்ய த்ரில்லராக இருக்கிறது. 

பலமிக்க காவல்துறை, மீடியா பேசுவதையும், கொள்ளையர் பேசுவதையும் கேட்டு மண்டையை ஆட்டிக்கொண்டிருக்குமா, மீடியாவிற்கு எப்படித் தகவல்கள் கசிகின்றன என்பதைக் கடைசியில் தான் ஆராயுமா, சிசிடிவி ஃபுட் டேஜ் பார்ப்பதை மட்டுமே முழு வேலையாகச் செய்துகொண்டிருக்குமா, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் லிக்விட் கேஷாக வைத்திருப்பதெல்லாம் இந்தியப் பொருளாதாரத்தில் சாத்தியமா எனப் பல கேள்விகள் எழுகின்றன. 

இரண்டாம் பாதியில், அஜித் யார் என்பதையும் கொள்ளைக்கான காரணத்தையும் குறைந்த காட்சிகளின் வழியாக எமோஷனலாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் பொங்கல் ட்ரீட் என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் இந்த 'துணிவு' அடிதடி.... 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.