ஜிவி 2 திரைப்படத்தை கலர்ஸ் தமிழ் வழங்கவுள்ளது!
பொங்கல் பண்டிகைக்கு பிறகு, வயகாம் 18 இன் தமிழ் சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, திரில்லர் மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த ஜீவி 2 திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியர் வரும் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 22, 2023 அன்று ஒளிபரப்ப உள்ளது. கதாநாயகன் சரவணனின் வாழ்க்கை முதல் பாகத்தின் முடிவில் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்குகிறது, ஏனெனில் அவரது விதி, அவரது கடந்த கால வாழ்க்கை மோதல்களின் சூழலில் இழுக்கப்படுகிறது. நடிகர்கள் வெற்றி, மைம் கோபி, அஸ்வினி, கருணாகரன் மற்றும் ரோகிணி ஆகியோர் நடிப்பில் இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இயக்கிய மர்மம் கலந்த இத்திரைப்படத்தை காண, வரும் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 22, 2023 மதியம் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ஜிவி முதல் பாகத்திலிருந்து அதே மனநிலையுடன் தொடங்கும் ஜிவி 2, ஒவ்வொரு சூழ்நிலையிலும் சில வலுவான மோதல்களின் முன்னும் பின்னும் இருக்கும் கர்மாக்களின் முக்கோணக் கருத்துடன் தொடர்புடைய அதன் கோட்பாடுகளுடன் கதாநாயகனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில், சரவணன் தனது வீட்டு உரிமையாளர் மகளை திருமணம் செய்த பிறகு தொடர்ச்சியான பல சவால்களை எதிர் கொள்கிறார். கதையானது சில எதிர்பாராத திருப்பங்களுடன் வேறு வேறு பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்கிறது. இந்த சிக்கலான குழப்பத்திலிருந்து கதாநாயகன் எப்படி தன்னை மீட்டுக் கொள்கிறார் என்பது கதையின் மீதியாகும்.
இதை பற்றி இயக்குநர் வி.ஜே.கோபிநாத் பேசுகையில், “பூர்வ கர்மாவை மையமாக வைத்து, நிகழ்கால வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் கடந்த கால தொடர்புடைய நிகழ்வுகள் ஒத்திசைவான இந்த சிக்கலான சுவாரஸ்யமான கதையை கலர்ஸ் தமிழ், பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.ஜிவி2 திரில்லர் திரைப்படம் அனைவரையும் இறுதி வரை கவர்ந்திழுக்கும் என்று நான் நம்புகிறேன், மேலும் மக்கள் இந்த தொடர்ச்சியை தொடர்ந்து ரசிப்பார்கள், ஏனெனில் இது தொடர்ந்து அவர்களை யூகிக்க வைக்கும். "
எண்ணற்ற சஸ்பென்ஸ் மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த ஜிவி 2 திரைப்படத்தை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், வரும் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 22,மதியம் 2:00 மணிக்கு கண்டு மகிழுங்கள்.
கருத்துரையிடுக